போக்குவரத்து பணியாளர்கள் நியமனத்துக்குத் தனித் தேர்வு!

Published On:

| By Balaji

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு, தனி தேர்வு கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் கோவை சாமி. மாற்றுத்திறனாளியான இவர் ஐடிசி பிட்டர் படிப்பை முடித்து போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சி பெற்றுள்ளார். தனக்கு தமிழக போக்குவரத்துக் கழகத்தில் பணி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து 22 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தனக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வரவில்லை. எனவே, தனக்குப் பணி வழங்கும்படி போக்குவரத்துக் கழகத்தில் கொடுக்கப்பட்ட மனுவைப் பரீசிலிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இம்மனுவை 2014இல் விசாரித்த நீதிமன்றம், போக்குவரத்துக் கழகங்களில் உரிய முறையில் விளம்பரங்கள் கொடுக்கப்படாமல் பணி நியமனங்கள் நடைபெறுவதாகவும், தேர்வு நடைமுறைகள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டதுடன் அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது வேறு அமைப்பின் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தி பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. அதில் நடத்துநர்கள், ஓட்டுநர்கள், இளநிலை உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்குக் கல்வித் தகுதி, வயது, அனுபவம் உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் செயல்முறை தேர்வுகள் நடத்தப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கை நேற்று (ஜூலை 13) விசாரித்த நீதிபதிகள் சசிதரன், பி,டி.ஆஷா போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் நியமனத்தில் உரிய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் அதற்குரிய எந்த நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை என்று தெரிவித்தனர். மேலும், போக்குவரத்துத் துறை பணியாளர்கள் தேர்வுக்கு மூன்று மாதங்களில் தனித் தேர்வு கொள்கைகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

இந்தத் தேர்வில் மனுதாரர் கலந்து கொள்ளும் வகையில் அவருக்கான வரம்பைத் தளர்த்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share