அதிக புகை வெளியிடும் வாகனங்களைப் பறிமுதல் செய்யக் கோரிய வழக்கில் போக்குவரத்து உள்துறை கூடுதல் செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
வாகனங்களைத் திரவ எரிபொருளிலிருந்து, வாயு எரிபொருளுக்கு மாற்றி புகையைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், உச்ச நீதிமன்றமும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இந்தியாவில் 25 லட்சத்து 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், வாகனப் புகை வெளியேறுவது தொடர்ந்தால், தமிழகம் சுடுகாடாக மாறும் நிலை உருவாகும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நேற்று (மார்ச் 2) விசாரித்த நீதிபதிகள், போக்குவரத்துத் துறை கூடுதல் செயலர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.�,