பொள்ளாச்சி: குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரிக்கும் வீடியோ!

Published On:

| By Balaji

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய சபரிராஜன், திருநாவுக்கரசு ஆகியோரைச் சிலர் விசாரிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில், தன்னிடம் இருந்து திருநாவுக்கரசு வீடியோக்களை மிரட்டி வாங்கியதாகக் கூறுகிறார் சபரிராஜன். நான் கேட்கவில்லை என்றும், அவராகவே தனது செல்போனுக்கு அனுப்பினார் என்றும் முரணாகப் பதிலளிக்கிறார் திருநாவுக்கரசு. தமிழகத்தையே உலுக்கும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்த வழக்குப் பதிவுக்கு, இந்த சம்பவமே அடிப்படையாக அமைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சியில் இளம்பெண்கள், மாணவிகளை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுவதற்கு முன்னால் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று (மார்ச் 12) பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் திருநாவுக்கரசுக்கு ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தார் அவரது தாயார் லதா. அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் அவரிடம் பேசியபோது, தன் மகன் திருநாவுக்கரசு எதுவுமே செய்யவில்லை என்று தெரிவித்தார். தனது மகனைச் சிலர் அடித்ததனால் கோயம்புத்தூர் மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளித்ததாகவும், தன்னையும் அதுபோல தாக்குமாறும் கூறி கதறி அழுதார். இந்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வெளியானது.

திருநாவுக்கரசு எதனால், எப்போது காயமடைந்தார் என்று அவர் விளக்கவில்லை. அதற்குப் பதில் கூறும் வகையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் திருநாவுக்கரசு, சபரிராஜனிடம் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்த வழக்கு குறித்துப் பேட்டியளித்த கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், இந்த வழக்கில் 4 பேருக்கு மட்டுமே தொடர்பிருப்பதாகவும், அரசியல் பின்னணி எதுவும் இல்லையெனவும் தெரிவித்தார். அதிமுக பிரமுகர் பார் நாகராஜனுக்கு, புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் மட்டுமே தொடர்பிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், இந்த வழக்கில் 4 வீடியோக்கள் மட்டுமே கிடைத்தது எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் மாற்றுக் கருத்துகளைக் கூறுவது போல அமைந்துள்ளது. திருநாவுக்கரசு, சதீஷ், நாகராஜ் ஆகிய மூவரும் இணைந்து சபரிராஜனிடம் இருந்து வீடியோக்களைப் பெற்றதாக, இந்த பதிவு தொடங்குகிறது.

**அந்த வீடியோவில் இடம்பெற்ற உரையாடல்:**

என்ன பண்ண, சொல்லு?

திரு: நானு, சதீஷ், நாகராஜ் எல்லாரும் சேர்ந்து இவன (சபரி) அடிச்சு அத வாங்கினோம்.

எத வாங்கின?

திரு: எல்லா வீடியோவும் வாங்கினோம்.

.

எந்த வீடியோ? யார் பேரு, என்ன ஏதுன்னு சொல்லு.

திரு: சபரியோட வீடியோ.

சபரியோட வீடியோ யார் கூட?

திரு: எல்லா பொண்ணுங்க கூடயும்.

நீங்க என்ன பண்ணிங்க?

திரு: நான் ஒண்ணுமே பண்ணல.

டேய் சபரி, இவன் ஏதாவது பண்ணி இருக்கானா? எதுவுமே பண்ணதில்லையா?

சபரி: பண்ணியிருக்கான் அண்ணா.

என்ன பண்ணியிருக்கான்?

சபரி: நிறைய பொண்ணுங்கள கரெக்ட் பண்ணி இருக்கான்.

நீ இவன்கிட்ட மிரட்டி வாங்கி, ரெண்டு பேரும் என்ன பண்ணுவீங்க?

சபரி: என்கிட்ட மிரட்டி வாங்கினது அவங்க விருப்பப்பட்டு எடுத்தது தான் அண்ணா”

என்ன பண்ணுவீங்க?

சபரி: என்கிட்ட மிரட்டி வாங்குவாங்க.

வாங்கி என்ன பண்ணுவீங்க?

சபரி: நான் அதுக்கு அப்புறம் அவங்க பக்கமே போறது இல்ல.

வேற என்ன பண்ணுவாங்க?

சபரி: மிரட்டி அவங்கள கூப்பிடுவாங்க அண்ணா. நான், இந்த வீடியோ எடுத்தவங்களை எல்லாம் இவங்களுக்கு தெரியாது.

அண்ணா. இதுவரைக்கும் எதுவும் பண்ணதில்ல அண்ணா.

சரி அந்த பொண்ணை என்ன பண்ணான்?

சபரி: எந்த பொண்ணு? இப்போ நான் அனுப்பினதா?

ஹ்ம்ம்.

சபரி: அண்ணா அத வச்சு எதுவுமே பண்ணல அண்ணா. பண்ண மாதிரி தெரியல. நான் ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் அனுப்பினேன்.

எதுக்கு தேவையில்லாத வேலை. இவன் தங்கச்சின்னு தெரியுமா தெரியாதா?

சபரி: அவரோட தங்கச்சின்னு சத்தியமா தெரியாது.

திரு: சத்தியமா தெரியாதுண்ணா.

சரி தெரியாம இருக்கட்டும். இப்படி பண்ணுவீங்களா?

திரு: ரெண்டு வருஷம் அந்தப் பொண்ணுகூட நல்லாத்தான் பேசினேன். தங்கச்சியா தான் பேசுனேன். வேணும்னா அந்தப் பொண்ணையே கேளுங்க. சத்தியமா உன் தங்கச்சியைப் போய் கேள்றா.

ஃபோன்ல எதுக்கு வெச்சிருந்தீங்க எல்லாம்?

திரு: இவனோடது தான் எல்லாமே.

உன் ஃபோன்ல இல்லவே இல்லை இது?

திரு: அது எல்லாத்தையும் அழிச்சிட்டேண்டா.

ஃபோன்ல இருக்க புள்ளைங்கள்லாம் யாரு?

திரு: அதெல்லாம் தெரியல. அவனுக்குத்தான் தெரியும்.(சபரியை கைகாட்டுகிறார்)

ஃபோட்டோவெல்லாம் எடுக்காதீங்க? அதெல்லாம் அதுலயே இருக்கட்டும்.

ஏண்டா உனக்கு தங்கச்சி இருக்குல்ல இப்டி. அடுத்தவங்க இப்டி பண்ணா ஒத்துக்குவியா?

திரு: நான் எதுவுமே பண்ணதில்லை.

டேய் டேய் எதுவும் பண்ணதில்லைன்னு மட்டும் சொல்லாத…

திரு: பண்ணிருக்கேண்டா. நான் இப்ப பண்றதில்லைடா.

உனக்கு தங்கச்சி இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். யாராவது உன்னை பேசிருப்பாங்களா?

திரு: பேசினதில்லைண்ணா.

எல்லாருமே தங்கச்சி மாதிரி தான உன் தங்கச்சியையும் பாக்குறாங்க?

திரு: நானும் தங்கச்சியா தான் பேசுனேன். நீ வேணும்னா அந்த பொண்ணை கேளுடா.

அப்பறம் என்னத்துக்கு வீடியோ வாங்குன?

திரு: வீடியோ நான் அனுப்பவே கேக்கல. அவனே தான் அனுப்புனான்.

நீ எதுக்குடா முதல்ல எடுத்த? (சபரி அடிவாங்குகிறார்) வீடியோ எடுப்பாராம். போடு அவன போடு. மச்சான் உதைங்க மச்சான் அவனை. வீடியோ எடுப்பானாம். இவ்வளவு நாள் என்ன பண்ண. எத்தனை புள்ளை வாழ்க்கையைடா கெடுப்பீங்க?

அவனைப்போடுடா. திருவைப் போடுடா. வாய்லயே போடுடா. எத்தனை பேத்தோட வாழ்க்கையை கெடுத்திருப்பான்டா. போடுணா, அவன் கால்லயே போடுனா. இனி அவன் நடக்கவே கூடாது.

சபரி: கால் இருக்குறதே தெரியலண்ணா.

எப்படி தெரியும்? இனிமேல் எவனாவது வீடியோ எடுப்ப? உடை அந்த காலை உடை.

சபரி: இஷ்டம் இல்லாம பண்ணதே இல்லைண்ணா.

இவ்வாறு இந்த வீடியோ முடிவடைகிறது. திருநாவுக்கரசு, சபரிராஜனிடம் பெறப்பட்ட வீடியோ ஆதாரங்களை வைத்தே பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வழக்கு விசாரணையில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share