]பொன்னார் பதிலடி: திமுகவில் உள்ளடி !

public

?

வேலூர் ,தருமபுரி , மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள மைல் கற்களில் இந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டதை அடுத்து மீண்டும் இந்தி எதிர்ப்பு போர் வெடிக்குமென்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் காட்டமாக அறிக்கை விடுத்தார்.இந்த அறிக்கை வந்ததால் பா.ஜ.க.சார்பில் பேசிய மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ‘திமுகவை சார்ந்த டி.ஆர்.பாலு மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த போது வெளியிடப்பட்ட சுற்றிக்கையின் படிதான் இந்தியில் எழுதப்படுகின்றது’ என மிகவும் காட்டாமாக பதிலளித்தார்.

இதையடுத்து திமுகவில் டி.ஆர்.பாலுவின் உட்கட்சி எதிரியான பழனி மாணிக்கம் மகிழ்ச்சியில் திளைக்கிறாராம். திமுகவின் அடிப்படைக் கொள்கைக்கே எதிராக செயல்பட்டிருக்கும் டி.ஆர் பாலுவிற்கு கட்சியில் இன்னமும் முக்கியத்துவம் தரக்கூடாது என தனது ஆதரவாளர்கள் மூலம் செயல் தலைவர் ஸ்டாலினுக்கு

புகார்க் கடிதங்கள் அனுப்ப உத்தரவிட்டுள்ளார் பழனி மாணிக்கம்.

போகிற போக்கில் பொன்னார் போட்ட குண்டு திமுகவில் மீண்டும் கோஷ்டி பூசலை முடுக்கிவிட்டுள்ளது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.