{பொங்கல் : ரயில் டிக்கெட் ரிசர்வேசன் தொடக்கம்!

public

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (செப்,15) முதல் தொடங்கியது.

வரும் 2018 ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி சென்னையில் தங்கியிருக்கும் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதற்காக ரயில்வே சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளும் திட்டம் நடைமுறையில் உள்ளதால் , ஜனவரி,12 ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வதற்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஆன்லைனில் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருந்தாலும் சென்னை எழும்பூர், சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் ஏராளமான மக்கள் இன்று அதிகாலை முதலே காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்தனர். பெண்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்ட்டர்களும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியால் டிக்கெட் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

வழக்கம்போல முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் ஜனவரி,13 ஆம் தேதி பயணம் மேற்கொள்பவர்கள் நாளை முன்பதிவு செய்யலாம் என்றும், பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கான முன்பதிவு செப்,18 தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.