பேஸ்புக் நிறுவனம் 8 ஆண்டுகளுக்கு முன்பு நேர்காணலில் ஒருவரை நிராகரித்தது. பிறகு சில வருடங்கள் கழித்து அவரது நிறுவனத்தையே விலைக்கு வாங்கி அவரை கோடீஸ்வரனாக்கியது.
வாட்சப்-ன் துணை நிறுவனரான பிரான் ஆக்டன் கடந்த 2009ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தின் நேர்காணல் ஒன்றில் நிராகரிக்கப்பட்டார். அதே ஆண்டில் ட்விட்டர் நிறுவனத்தாலும் நிராகரிக்கப்பட்டார். பிறகு பிப்ரவரி 24, 2009 அன்று பிரான் ஆக்டனும் அவரது நண்பர் ஜான் கோமும் இணைந்து வாட்சப்பை நிறுவினார்கள். இருவருமே யாஹு-வில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் கடந்த 2014ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வாட்சப்பை 19 பில்லியன் கோடிக்கு வாங்கி வாட்சப்பின் துணை நிறுவனர்கள் இருவரையும் பில்லியனர்களாக்கியது.
‘நான் வளர்ந்த சமூகத்தில் தனிமனித சுதந்திரம், பேச்சு சுதந்திரம் போன்றவை இல்லை. எதையும் பகிர முடியாது. ஆனால் இங்கு ஜனநாயகமும் பேச்சு சுதந்திரமும் உள்ளது. அதை காக்க வேண்டியது நம் கடமை” என்று ஒரு நேர்காணலில் கூறினார் கோம்.
வெவ்வேறு பாதைகளில் இருந்து வந்த ஆக்டன் மற்றும் கோம் இருவரும் யாஹூ-வில் இணைந்தார்கள். 2009ஆம் ஆண்டு யாஹூ-வில் இருந்து விலகினார்கள். பிறகு வாட்சப்பை நிறுவினார்கள். எட்டு ஆண்டுகளுக்கு முன்பே ஆக்டனை நிராகரித்தது மிகப்பெரிய தவறு என்பதை பேஸ்புக் நிறுவனர் மார்க் உணர்ந்திருப்பார்.�,