பாகிஸ்தான் இந்தியா இடையேயான பேச்சுவார்த்தை தொடர்பாகப் பிரதமர் மோடிக்குத் தொடர்ந்து இம்ரான் கான் கடிதம் எழுதி வரும் நிலையில், இன்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாக ஜியோ டிவி தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகப் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. எல்லை பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இரு நாட்டுக்கு இடையேயான பேச்சுவார்த்தை முற்றிலும் தடைப்பட்டது.
இந்த சூழலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சுவார்த்தை தொடர்பாக பிரதமர் மோடிக்குத் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த வாரம் நடைபெறும் ஷாங்காய் மாநாட்டில் இரு நாட்டுப் பிரதமர்களும் சந்திக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் இதற்கு இந்தியா மறுப்புத் தெரிவித்தது.
அதாவது, ”ஜூன் 13, 14 தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாடு கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக்கில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்தமாநாட்டில் கலந்து கொள்கிறார். அப்போது, இம்ரான் கான், பிரதமர் மோடி இடையே சந்திப்பிற்கு ஏதும் ஏற்பாடு செய்யப்படவில்லை” என்று கடந்த 6ஆம் தேதி இந்தியா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இம்ரான் கான், மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளதாகப் பாகிஸ்தான் ஊடகமான ஜியோ டிவி தெரிவித்துள்ளது.
அதில், 2ஆவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவது தான் இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் ஒரே தீர்வு ஆகும். காஷ்மீர் பிரச்சினை, எல்லை பயங்கரவாதம் உள்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசி தீர்வுகாணத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இக்கடிதத்துக்கு இந்தியா இன்னும் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
**
மேலும் படிக்க
**
**
[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)
**
**
[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)
**
**
[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)
**
**
[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)
**
**
[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)
**
�,”