பெல்ஜியம் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு 11 பேர் பலி

public

பெல்ஜியம் தலைநகர் பிரசலஸில் உள்ள ஜவெண்டெம் விமானநிலையத்தின் புறப்பாட்டு அறையில் (departure hall) இன்று காலை அடுத்தடுத்து இரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.இதில் 11 பேர் இறந்துள்ளனர்.25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இந்த குண்டுவெடிப்பின் காரணமாக பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.விமான நிலையமும் உடனடியாக மூடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் நடந்த பாரிஸ் தாக்குதலில் தொடர்புடையவராகக் கருதப்படும் ஷாலா அதர்ஸ்லாம் என்பவரை பெல்ஜியம் போலீசார் நான்கு தினங்களுக்கு முன்பு கைது செய்திருந்த நிலையில் இன்று காலை குண்டு வெடிப்பு நடந்துள்ளதால் பெல்ஜியம் முழுக்க பரபரப்பு நிலவுகிறது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0