எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியால் கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான முடிவு ஏதும் ஏற்படாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா, அம்மாநில முதல்வர் குமாரசாமிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதில் இன்று (ஜூலை 19) பிற்பகல் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் கூட்டணியிலிருந்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் என 19 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் ஆளும் குமாரசாமி அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று சட்டமன்றத்தில் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டது. அப்போது பாஜக, குமாரசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்களின் கடும் அமளியால் அவை இன்று (ஜூலை 19) 11 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் முதல்வர் குமாரசாமிக்கு, ஆளுநர் வஜூபாய் வாலா இன்று மதியம் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபியுங்கள் என்று கடிதம் எழுதியுள்ளார். நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடங்கிய நிலையில் அதில் என்னால் தலையிட முடியாது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு ஒரு முடிவுக்கு வராமல் சட்டமன்றம் நாளை (இன்று) ஒத்திவைக்கப்பட்டதாக எனக்குத் தகவல் கிடைத்தது. இந்த நிலையை இந்திய அரசியலமைப்பால் நிர்வகிக்கப்படும் ஒரு ஜனநாயக அமைப்பில் தொடர முடியாது. எனவே இன்று மதியம் 1.30 மணிக்குள் உங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான எடியூரப்பா, பாஜக எம்.எல்.ஏ.க்களுடன் சட்டமன்றத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று தெரிவித்துள்ள அவர், ஆளும்கட்சியின் பலம் 98 தான். ஆனால், பாஜகவின் பலம் 105 ஆக உள்ளது. இதனால் நம்பிக்கையை இழந்த குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பில் தயக்கம் காட்டுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஸ்ரீமந்த் படில் தன்னை யாரும் கடத்தவில்லை, தான் நெஞ்சுவலியால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
பாஜகவினர் தர்ணாவில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எடியூரப்பா தலைமையில் விதானா சவுதாவுக்கு தலையணை போர்வையுடன் வந்துள்ளனர்.
வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை சட்டமன்றத்தை விட்டு நகர மாட்டோம் என்று கூறி பாஜக எம்.எல்.ஏ.க்கள் இரவு முழுவதும் சட்டமன்றத்திலேயே இருப்பதால் கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
**
மேலும் படிக்க
**
**[‘காம்ரேட்’டாக மாறிய விஜய் சேதுபதி](https://minnambalam.com/k/2019/07/19/26)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”