பள்ளிகூடத்துல படிக்கும் போது சின்ன பசங்க பஞ்சாயத்தை தீர்த்துவைக்க போயிருக்கேன். ‘ஏன் டா அவனை அடிச்சியா’ன்னு கேட்டா, ‘அண்ணன்.. போனவாரம் அவன் அந்த தெருக் காரன் 4 பேரை அடிச்சான், இந்த வாரம் இந்த தெரு பையனை கல்லை விட்டு எறிஞ்சான்’ன்னு எதிர் பார்ட்டியை பத்தியே பேசிகிட்டு இருப்பான். கடைசி வரைக்கும் அவன் அடிச்சதை சொல்லவே மாட்டான். பார்த்தா அவன் தான் பெரியா குசும்புக்காரனா இருப்பான். அதே மாதிரி தான் இன்னைக்கு இங்கேயும் நடக்குது. ’எப்பா ஏய்.. கொலை பண்ணுணியா… கொள்ளை அடிச்சியா’ன்னு கேட்டோம்னா, ‘அவன் நாலு பேரை கொண்ணுருக்கான், இவன் ரெண்டு பேரை கொலை பண்ணிருக்கான்’னு சம்பந்தமில்லாம சுத்தி இருக்குறவன் எல்லாத்தையும் சொல்றாங்க. அப்ப மாதிரி இந்த குமாரு தீர்ப்பு சொல்ற இடத்துல இருந்தேன்னா இன்னைக்கு நிலைமையே வேற. சரி நமக்கு ஏத்தமாதிரி இங்கேயே வச்சு செய்வோம். அப்டேட்டை பாருங்க.
**@Kannan_Twitz**
உரையாடலின் போது பாதில் எழுந்து செல்வது போதிமரத்தினை நோக்கி என்றாலும் தவறுதான்.
**@sinna_twitz**
போகி பண்டிகைக்கு பேச்சிலர் ரூமை திறந்தால் போன வருடம் பொங்கல் கொடுத்த வாழை இலை இன்னும் ஒரு மூலையிலையே இருக்கும்.
**@shivaas_twitz**
என்னதான் அதிமுகக்காரரா இருந்தாலும், பொங்கல் அன்று சூரியனை கையெடுத்து கும்பிட்டு தான் ஆகணும்..!
**@HAJAMYDEENNKS**
விஜய் டிவி செய்யப்போற ஒரே ஒரு நல்ல விசயம் பரியேறும் பெருமாள் படத்தை திரும்ப திரும்ப போடப்போறதுதான் !
**@ajmalnks**
ஒரேஆண்டில் என்கவுண்டர்களில் 48பேர் சாவு!
உ.பி அரசு ஒப்புதல்! உச்சநீதிமன்றம் அதிர்ச்சி.
ச்சே போட்டியில் நாம தோத்துட்டோமே-எடப்பாடி மைன்ட் வாய்ஸ்
**@Siva Raman**
1. “தமிழன் அப்போதே அப்படி..”,
2. “முறத்தால் அடித்தால் தமிழச்சி”,
3. “கல் தோன்றி மண் தோன்றா..”
4. “தமிழே நம் அடையாளம்”
5. “முன்னோர்கள் ஒன்றும்..”
இந்த அஞ்சு டயலாக் மட்டும் பயன்படுத்தினால் போதும் நீங்களும் ஒரு பட்டிமன்ற பேச்சாளர்….
**@karthekarna**
தேங்காயை இரண்டே அடியில் சரிசமமாக உடைப்பதை எல்லாம் வீரம் என்று நம்பும்வரை பெண்களை ஈசியாக ஏமாற்றலாம்
**@Annaiinpillai**
திருட்டு சிடிய ஒழிக்க போராடுன நடிகர் விஷாலோட புதுப்படத்த டிவியிலையே போட்டது…! மதுரைக்காரனுக்கு வந்த சத்தியசோதனை தான்..!
**@mekalapugazh**
எஸ்வி சேகரையும் எச்ச ராஜாவையும் ஏன் இன்னும் பிடிக்கலன்னு கேட்டு அரசை அசிங்கப்படுத்திய நீதிமன்றம்..
கொடநாடு குற்றச்சாட்டில் இவர்களை ஏன் பிடித்தீர்கள் என்று கேட்டு அசிங்கப்படுத்தியிருக்கிறது.
**@ajmalnks**
ரேசன் கடையில் முதலீடு செய்த பணத்தை அரசு நேற்று முதல் இருமடங்கு வருமானமாக ஈட்ட ஆரம்பித்திருக்கிறது டாஸ்மாக்கின் மூலம்.
**@kathir_twits**
தண்ணீரில் பால் கலப்பதை போன்றே, பொங்கலில் முந்திரி பருப்பும் கலக்கப்படுகிறது !
**@rahimgazali**
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பிலிப் கோட்லெர் விருது-
அமெரிக்காவிலும் நாச்சியப்பன் பாத்திரக்கடையின் கிளை இருக்கும்போல…
**@kathir_twits**
வருடத்திற்கு விஜய் சேதுபதி நாளு படம் ரிலிஸ் செய்வது போல்
சாலமன் பாப்பையா நாலு பட்டிமன்றம் நடத்திவிடுகிறார் !
**@Thaadikkaran**
லேடிஸ்க்கு எவ்ளோ ஆயிரம் கொடுத்து ட்ரெஸ் எடுத்தாலும்,அவங்களுக்கு ப்ரீயா கிடைக்குறே கட்டப்பையிலும் ட்ராவெல் பேக்லயும்தான் கண் இருக்கு..!!
**@Suyanalavaathi**
ஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு – கோடநாடு வீடியோ குறித்து முறையீடு – செய்தி #
முறையிடுவதற்கு வேற ஆளே கிடைக்கலையா உங்களுக்கு ?
**@Annaiinpillai**
கைவிடப்பட்ட பசுக்களை பராமரிப்போரை கெளரவிக்க ராஜஸ்தான் அரசு முடிவு#
பஞ்ச்: பசுக்கு இருக்கிற மரியாதை சிசுக்கு இல்லை!
**@HAJAMYDEENNKS**
2018ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருதுக்கு அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் தேர்வு – செய்தி #
பெரியார் விருதுன்னா வயசான பெரியவருக்கு கொடுக்குற விருதுன்னு நினைச்சுட்டாங்க போல !
**@yugarajesh2**
பயப்புள்ளைங்க? நம்மக்கிட்ட கடன் கேட்கும்போது ‘மன் கீ பாத்ல’ பேசுற மாதிரி உணர்ச்சிக்கரமா பேசி வாங்கிட்டு போறானுங்க?
அதே கொடுத்த கடனை நாம திரும்பி கேட்கும் போது ‘புடுச்சேரிக்கு வணக்கும்’ ரேஞ்சுல டீல் பண்ணிட்டு போறானுங்க.
**@shivaas_twitz**
சிட்டி பொங்கல்ல என்ன வசதின்னா, ‘பொங்கலோ.. பொங்கல்’னு கத்துறதுக்கு பானை பொங்குற வரைக்கும் பார்த்துகிட்டே இருக்க வேண்டிய அவசியமில்லை…
குக்கர் விசில் சத்தம் கேட்டதும் கத்தலாம்..!
**@Annaiinpillai**
ஒரு பைசா லஞ்சம் வாங்கினாலும் நான் அரசியலை விட்டு ஒதுங்கிவிடுவேன். – பொன்.ராதாகிருஷ்ணன் #
# சாருக்கு இந்தியன்2 பஸ்ட் லுக் போஸ்டர் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா?!
-லாக் ஆஃப்
�,”