பெண்ணை மாட்டு சாணம் உண்ணத் துன்புறுத்திய மந்திரவாதி!

public

கடந்த வாரம் இளம் பெண்ணை ஒருவர் சாட்டையால் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அந்தப் பெண் குறித்த தகவல் நேற்று (ஜூன்,13) வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா, லத்தூர் மாவட்டம் சாக்குர் அருகே உள்ள தங்கர்வாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண்ணுக்குப் பேய் பிடித்திருப்பதாகவும், வீட்டில் உள்ள ஆண்களைத் தாக்குவதாகவும், அவரது உறவினர்கள் பேயை விரட்டக் கர்நாடகா மாநிலம் பீதார் மாவட்டத்தில் உள்ள மந்திரவாதியிடம் கடந்த 6 ஆம் தேதி அழைத்துச் சென்றுள்ளனர். மாட்டு சாணத்தை உண்டால் பேய் ஓடிவிடும் என மந்திரவாதி தெரிவித்துள்ளார்.

ஆனால், இதற்கு அந்தப் பெண் சம்மதிக்காததால், அந்தப் பெண்ணை உறவினர்கள் கயிற்றால் கட்டி வைத்துள்ளனர். பின்னர் மந்திரவாதி அந்தப் பெண்ணை சாட்டையால் அடித்துத் துன்புறுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து, வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணை எருமை மாட்டு சாணத்தை உண்ண வைத்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணின் தந்தை, மந்திரவாதி உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் பிரபாகர் கேசலே (35), கங்காதர் ஷாவாலே (65), பண்டிட் கோரே (37), தாகடு ஷாவாலே (40) ஆகியோரை நேற்று (ஜூன்,13) கைது செய்தனர். மந்திரவாதியைப் பிடிக்கக் கர்நாடகாவின் பிதார் மாவட்டத்திற்கு ஒரு குழு விரைந்துள்ளது.

பேயை ஓட்டுவதாகப் பெண்ணை அடித்துத் துன்புறுத்தும் இந்த வினோதச் சடங்கிற்குச் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நரபலி கொடுக்கும் சம்பவங்கள் கர்நாடகாவில் அதிகளவில் நடைபெறும். இதனால், மாந்திரீகச் செயல்பாட்டிற்குக் கடிவாளம் போட நரபலி மற்றும் பிற மனிதாபிமானமற்ற, கொடூர நடைமுறைகள் மற்றும் பில்லி சூனியம் தடுப்பு, ஒழிப்பு சட்டம் 2013 என்ற பெயரில் சட்டம் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. மூட நம்பிக்கைகளைப் பரப்புவது யாராக இருந்தாலும், அது எந்த வகையில் பரப்பப்பட்டாலும் நடவடிக்கை எடுப்பது தான் இதன் நோக்கம். மூட நம்பிக்கைகளைப் பரப்புவோருக்குத் தொலைக்காட்சிகள் வாய்ப்பளித்தால், அவற்றின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். எது மூட நம்பிக்கை, எது நம்பிக்கை என்பது குறித்த வரையறை, அரசு கொண்டு வரும் சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கும் என 2013 ஆம் ஆண்டு பதவியேற்ற முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.

மக்களின் அறியாமை மற்றும் கஷ்டத்தைப் பயன்படுத்தி அவர்களைக் குறிவைத்து மாய மந்திரங்கள் என்னும் பெயரில் ஏமாற்று வேலைகள் நடந்து வருகிறது. மக்கள் நம்பும் வரை இதுபோன்ற மனிதத் தன்மையற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *