பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க,தமிழகக் காவல் துறை தனிப்பிரிவை உருவாக்கியுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழகத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அது மட்டுமல்லாமல் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் ஒரு தனிப்பிரிவைத் தமிழகக் காவல் துறை உருவாக்கியுள்ளது.
“இந்த பிரிவில் ஏடிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் நியமிக்கப்படுவார்கள். குழந்தைகள்,பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகள் குறித்து இந்த அமைப்பு விசாரணை நடத்தும். இந்த பிரிவு சிபிஐ, இன்டர்போலுடன் தொடர்பு கொண்டு குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் குறித்த தொகுப்பையும் உருவாக்கும்” என்று தமிழகக் காவல் துறை தெரிவித்துள்ளது.�,