புளியோதரை பார்சல்களை பறிமுதல் செய்த பறக்கும் படை

public

தமிழகம் முழுவதும் அதிரடிச் சோதனை நடத்தி உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வரும் தேர்தல் பறக்கும் படையினருக்கு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி ஆயிரம் பேருக்கு பிரியாணி தயார் செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து விளாத்திகுளம் தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, அங்கு 800 பேருக்கு புளியோதரை பார்சல் தயாராகிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து பறக்கும் படையினர் விசாரித்த போது மஞ்சநாயக்கன்பட்டி கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக புளியோதரை தயார் செய்வதாக கூறினர். ஆனால், அந்த கோவில் நிர்வாகத்திற்கு போன் செய்த போது அவர்கள் பொய் கூறியது தெரிய வந்தது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அங்கிருந்த 800க்கும் மேற்பட்ட புளியோதரை பார்சல்கள் மற்றும் பாத்திரங்களை பறிமுதல் செய்தனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *