புற்றுநோய் பாதிப்பு: உற்பத்தித் திறனில் இழப்பு!

public

புற்றுநோய் பாதிப்பால் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் உற்பத்தித் திறனில் பல கோடி டாலர்கள் அளவுக்குப் பெரும் இழப்பு ஏற்படுவதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

புற்றுநோயால் மனிதவளத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உற்பத்தித் திறனில் ஏற்படும் இழப்புகள் குறித்த ஆய்வுக் கட்டுரை, புற்றுநோய் பரவல் தொடர்பான ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வின்படி, புற்றுநோய் பாதிப்பால் கடந்த 2012ஆம் ஆண்டில் இந்தியா 6.7 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உற்பத்தித் திறன் இழப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இழப்பு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.36 சதவிகிதம் எனத் தெரிவித்துள்ளது.

புற்றுநோயால் மனிதவளத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உற்பத்தித் திறனில் ஏற்படும் இழப்பீட்டின் அடிப்படையில் தென்னாப்பிரிக்காவுக்கு முதலிடமும், அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.

உலகச் சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம்படி, ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் 1.4 கோடிப் பேருக்குப் புற்றுநோய் வருவதாகக் கூறுகிறது. மேலும், அடுத்து வரும் 20 ஆண்டுகளில் புதிய புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 70 சதவிகிதம் அதிகரிக்கலாம் என்றும் இந்த அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. இதையடுத்து, இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

புற்றுநோய் பாதிப்பில், உதடு மற்றும் வாய்ப்புற்றுநோய் போன்றவற்றால் ஏற்படும் உற்பத்தித் திறன் இழப்பே இந்தியாவைப் பொறுத்தவரை, அதிகமாக இருப்பதாக அந்த ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *