ஃபோனி புயல் பாதிப்பால், ஒடிசாவில் ஒரு குடும்பத்தினர் கழிவறையில் வசித்து வருகின்றனர்.
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டம் ரகுதெவ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிரோட் ஜெனா (58). இவர் ஒரு தினக்கூலி தொழிலாளி. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒடிசாவைத் தாக்கிய ஃபோனி புயலால், இவர் தன் வீட்டை இழந்துவிட்டார். இதனால், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டிருந்த7க்கு 6 அடி கழிவறையில் இவர் தன் மனைவி, இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.
“புயலில் என் வீடு தரைமட்டமாகிவிட்டது. அதில் மிஞ்சியது இந்த கழிவறை மட்டுமே. நாங்கள் புலம்பெயர வேறு இடம் இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன் எனக்கு ஒதுக்கப்பட்ட இந்த கழிப்பறை தற்போது எங்களுக்குப் புகலிடமாக இருக்கிறது. இன்னும் எத்தனை நாட்கள் இந்த கழிவறையில் இருக்கப் போகிறோம் என தெரியவில்லை” என்று கூறியுள்ளார் ஜெனா. புயலினால் இடிந்த வீட்டை மீண்டும் கட்டத் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
“புயல் மீட்பு மானியங்களுக்காகக் காத்திருப்பதை தவிர வேறு வழி இல்லை. புயல் இழப்பீடு தொகையை அரசு வழங்கும் வரை, கழிப்பறையில்தான் எங்கள் வாழ்க்கையை நடத்தியாக வேண்டும். கழிவறையில் தங்கியிருப்பதால் வெளியில் நாங்கள் மலம் கழிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார் இவர். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்னும் வீட்டு மானியத் திட்டத்தில் தான் விண்ணப்பித்ததாகவும், ஆனால் அது தனக்கு மறுக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் ஜெனா.
“புயலின் தாக்கத்தால் ஒரு குடும்பம் கழிவறையில் வசித்து வருவது எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. புயல் பாதிப்பு நிவாரணம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும்” என்று கூறியுள்ளார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலீப் குமார் பரிடா.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)
**
.
.
�,”