ஒரு கப் காபி! – ஓஷோ சிந்தனைகள்
உனது மனம் புத்துணர்வுடன் இருக்கும்போது இந்த முழு பிரபஞ்சமும் ஒரு மெல்லிசையாக மாறும். நீ புத்துணர்வுடன் இருந்தால் எல்லாமும் புதுமையாக இருக்கும். இந்த இயற்கையே புத்துணர்வாக மாறும். நீ புத்துணர்வுடன் இருந்தால், நினைவுகள் சுமையாக இருக்காது. எல்லாமும் இளமையாக புதிதாக வேறுபட்டதாக இருக்கும்.
நீ வெறுமையிலிருந்து செயல்புரியும்போது அங்கு உன்னைச் சுற்றி ஒரு புத்துணர்வு இருக்கும்.
சக்தி தேங்கி நிற்காமல் ஓடும்போது நீ புத்துணர்வாக இருப்பாய், நீ நதி போல ஓடுவாய்.
அனைத்துக்கும் சாட்சியாக இரு. புத்துணர்வோடு இருக்கும்போது மட்டுமே சாட்சியாக இருக்க முடியும்.
பக்குவப்படுதல் என்பது புத்துணர்வுடன் வெகுளித்தனமாக தூய்மையாக இருத்தலாகும்.
கடந்த காலத்தைப் பொறுத்தவரை நீ இறந்துவிடு. அப்போதுதான் புத்துணர்வுடன் புதிதாக இருக்க முடியும்.
ஒருவர் இந்தக் கணத்தை முழுமையாக வாழும்போது புத்துணர்வு பிறக்கும்.
வாழ்வை முழுமையாக மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடி ஆடிப் பாடி வாழு. அப்போது இந்தக் கணமே இந்த முழுப் பிரபஞ்சமும் தெய்வீகமானதாகிவிடும். உன் ஆடலில், பாடலில், சந்தோஷத்தில், பரவசத்தில் அது தெய்வீகமானதாகிவிடும். உன் ஆனந்தத்தில் நீ தெய்வீகத்தின் எல்லையைச் சென்றடைவாய்.
நினைவில் கொள், நீ மகிழ்ச்சியடைந்தால் தவிர உன்னால் அன்பு செய்ய முடியாது.
உன்னுள் சந்தோஷமும் கொண்டாட்டமும் நிரம்பி இருக்க முடியும்.
நீ என்ன செய்தாலும் அதை சந்தோஷமாக செய்யும்போது மகிழ்ச்சி தானாகவே நிகழும், மலரும்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
�,”