[புதுச்சேரி ஏடிஎம் கொள்ளையன் கைது!

Published On:

| By Balaji

புதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டுகளைத் தயாரித்து ஸ்வைப்பிங் மெஷின்

மூலமாக சுமார் ரூ.400 கோடி கொள்ளையடித்த கும்பலின் தலைவன் சந்துரு என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி சிபிசிஐடி சிறப்பு அதிகாரியாக ராகுல் ஆல்வா ஐபிஎஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜிந்தா கோதண்டா, சுப்பிரமணியன் அடங்கிய சிறப்புக் குழு அமைத்து ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடிக்க திட்டமிடப்பட்டது.

புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் வசிக்கும் சந்துருவைத் தமிழக போலீஸ் உதவியோடு அந்த மாநிலத்தின் சிபிசிஐடி போலீஸார் ஜூலை 11ஆம் தேதி 12.00 மணியளவில் சென்னையில் சுற்றிவளைத்துப் பிடித்துள்ளார்கள்.

சுமார் 400 கோடிக்கு மேல் கொள்ளையடித்துள்ள ஏடிஎம் கொள்ளைக் கும்பலின் தலைவனாக சந்துரு செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுதந்திரமாக போலீஸ் விசாரிக்க அனுமதி கொடுத்தால் அரசியல்வாதிகளும் எம்.எல்.ஏ.க்களும் போலீஸ் அதிகாரிகளும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படலாம் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share