புதிய அமைச்சரவையில் எந்த மாநிலத்துக்கு முன்னுரிமை?

Published On:

| By Balaji

புதிதாக அமையவுள்ள பாஜக அமைச்சரவையில் மேற்கு வங்கம், ஒடிசா, கர்நாடகா மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.

303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. இந்த ஆட்சியில் பாரதிய ஜனதா கட்சி புதிதாக வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்படி பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சரவையில் முக்கியத்துவம் பெறப்போகும் முக்கிய மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் மேற்கு வங்கத்தில் பாஜக 18 தொகுதிகளை வென்றுள்ளது. ஆளும் திருணமூல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளை வென்றுள்ளது.

இது மேற்கு வங்கத்தில் திருணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் இந்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் விதமாகவும், அடுத்து வரும் தேர்தல்களில் கூடுதல் வெற்றியைப் பெறும் விதமாகவும் மேற்கு வங்கத்துக்கு அமைச்சரவையில் கூடுதல் இடம் ஒதுக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அம்மாநிலத்தில் பாஜக சார்பாக வெற்றி பெற்ற 18 பாஜக வேட்பாளர்களில் 4 பேருக்கு அமைச்சரவையில் இடமளிக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் *தி எகனாமிக் டைம்ஸ்* ஊடகத்திடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

பாபுல் சுப்ரியோ மற்றும் எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோர் கடந்த அமைச்சரவையிலும் மேற்கு வங்கத்திலிருந்து அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இம்முறையும் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல, ஒடிசாவில் பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2014ஆம் ஆண்டு அமைச்சரவையில் ஒடிசாவைச் சேர்ந்த ஜுயல் ஒரம் பழங்குடியினர் நல அமைச்சராக இருந்தார். இம்முறை அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தேசியச் செயலாளர் சுரேஷ் புஜாரி (பர்கார்க்), அபர்ஜிதா சாரங்கி (புவனேஸ்வர்) ஆகியோர் மத்திய இணை அமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. ஜார்கண்டின் குந்தி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அம்மாநில முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம். கர்நாடகா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நேற்று மோடி தலைமையில் அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடந்தபோது சில அமைச்சர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்படாது எனவும், இளைஞர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!](https://minnambalam.com/k/2019/05/24/93)

**

.

**

[ஓ.பன்னீரின் ‘பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/25/30)

**

.

**

[மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?](https://minnambalam.com/k/2019/05/225/55)

**

.

.

**

[மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?](https://minnambalam.com/k/2019/05/25/25)

**

.

**

[தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!](https://minnambalam.com/k/2019/05/25/20)

**

.

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share