ஒளிப்பதிவு குறித்து அறிந்துகொள்ள பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே புத்தகங்கள் உள்ள நிலையில், அந்த கலையை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் புத்தகங்களை எழுதி வருகிறார் ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார். இவர், நாடக ஒளியமைப்பு, ஆவணப்படங்கள், திரைப்படங்கள், ஒளிப்பதிவுக் கலையைக் கற்பித்தல் என பன்முகத்தன்மை கொண்டவர். [தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்க இணையதளத்தில்](www.thesica.in) திரைப்பட தொழில்நுட்பக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார்.
திரைப்பட ஒளிப்பதிவு குறித்து கற்றுள்ள இவர் **“அசையும் படம் (முழுமையான ஒளிப்பதிவு கையேடு)** என்ற தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலை எழுதியவர். பிறகு ஒளிப்பதிவுத் தொழில்நுட்பத்தை பற்றி “பிக்சல்” (தமிழ் மற்றும் ஆங்கிலம்), “ஒளி ஓவியம்” என்ற புத்தகங்களும் ஒளிப்படக்கலை பற்றி “க்ளிக்”(போட்டோஃகிராபி), என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இவர் ஒளிப்பதிவு செய்த திரைப்படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளன. ஃபிலிம் மூலம் இவர் ஒளிப்பதிவு செய்த ‘ஆயிஷா’ 2001 ஆம் ஆண்டு லண்டன் திரைப்பட விழாவில் சிறந்த குறும்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவர் டிஜிட்டலில் ஒளிப்பதிவு செய்த ‘என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்’ என்ற குறும்படம் 59வது பெர்லின் உலகத் திரைப்பட விழாவில் பங்கேற்றது.
இவர் தற்போது ‘அட்வான்ஸ்ட் ஃபிலிம் லைட்டிங்’ குறித்து “திசை ஒளி” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் முதல் பிரதியை தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் பி.சி.ஸ்ரீராம் வெளிட, ஒளிப்பதிவாளர் சங்க பொதுச்செயலாளர் கண்ணன் பெற்றுக்கொண்டார். இந்தப் புத்தகம் குறித்து பி.சி.ஸ்ரீராம் **திசை ஒளி புத்தகம் திரைத்துறையைச் சார்ந்தவர்கள், திரைப்படம் கற்கும் மாணவர்கள், திரைப்படத்தை நேசிப்பவர்கள் என அனைவருக்கும் தேவையான ஒன்று** எனக் கூறியுள்ளார். இந்தப் புத்தகத்தை டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும்.
�,”