அரசுத் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல் புதிதாக ரூ.97க்கு இணையச்சேவை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனம் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தப்படி இந்தத் திட்டத்தில் ரூ.2200 செலுத்தி பாரத் மைக்ரோமேக்ஸ் மொபைல் போனை பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் பி.எஸ்.என்.எல் வழங்கும் பாரத் 1 சிம் கார்டை பயன்படுத்தி இச்சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.
தொலைத் தொடர்பு துறையில் நிலவுகின்ற போட்டிகளால் அண்மைக்காலமாக பெரும்பாலான நிறுவனங்கள் கடும் இழப்புகளையே சந்தித்து வருகின்றன. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பிறகு ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு துறையும் ஆட்டம் கண்டது. இந்நிறுவனம் அளித்த அதிரடி இலவச சலுகைகளால் வாடிக்கையாளர்கள் ஜியோ பயன்படுத்த ஆர்வம் காட்டினர். தற்போது இலவச சேவைகள் நிறுத்தப்பட்டு கட்டண சேவை முறையை அந்நிறுவனம் பின்பற்றி வருகிறது. இருப்பினும் தொலைத் தொடர்புத் துறைக்கான சந்தைப் போட்டியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
எனவே பல நிறுவனங்கள் கட்டணக் குறைப்பையும், பல்வேறு புதிய சலுகைகளும் அளித்து வருகின்றன. அந்தவகையில் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தற்போது ரூ.97க்கு 5ஜிபி டேட்டாவை ஒரு மாத காலம் (28 நாட்கள்) பயன்படுத்திக் கொள்ளும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் இந்தத் திட்டத்தில் 28 நாட்களுக்கு இலவசமாகப் பேசிக்கொள்ளும் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகை குறிப்பிட்ட அந்த மைக்ரோமேக்ஸ் மொபைலுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.�,