பிரீமியர் பேட்மிண்டன் லீக்: சென்னைக்கு ஹாட்-ட்ரிக் வெற்றி!

Published On:

| By Balaji

பிரீமியர் பேட்மிண்டன் லீக் (PBL) போட்டியில், சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற்றிபெற்றுள்ளது.

நேற்று(24.01.2020) சென்னை ஜவஹர்லால் நேரு இண்டோர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், சென்னை அணிக்காக விளையாடிய சத்விக்சைராஜ் மற்றும் சிராக் ஜோடி, பெங்களூரு அணியை 4-3 என்ற கணக்கில் தோற்கடித்து, சென்னை அணி வெற்றிக்கு வழிவகுத்தார்கள்.

3-3 என்று போட்டியை பெங்களூரு அணி சமன் செய்த பிறகு, யார் வெற்றிபெற போகிறார்கள் என்று முடிவுசெய்யும் இறுதி செட்டில், அதிரடியாக விளையாடிய சென்னை அணி, பெங்களூரு அணியை 15-9 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று போட்டியை கைப்பற்றியது.

ஆட்டத்தை சிறப்பாக துவங்கிய காயத்ரி, பேட்மிண்டன் தரவரிசையில் உலகிலேயே இரண்டாம் இடத்தில் இருக்கும் ‘தை சூ-யிங்’-கிடம் இருந்து முதல் செட்டை 15-13 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share