‘பிரிக்ஸிட்’ – இன்று முடிவுகள்: யூனியனில் நிலைக்குமா பிரிட்டன்?

Published On:

| By Balaji

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்க வேண்டுமா அல்லது வெளியேற வேண்டுமா என்பதைக் குறித்து முடிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நேற்று நடந்து முடிந்துள்ளது. இன்று சர்வதேச GMT 00.00 முதல் GMT 03.00 வரை வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக 382 இடங்களில் வாக்கு எண்ணிக்கை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இணைந்திருப்பதால் பிரிட்டிஷின் நிதிச்சுமை அதிகரிப்பதாகவும், அகதிகள் மற்றும் பிற தேசத்தவரின் வருகை அதிகரிப்பதால் உள்நாட்டு வாய்ப்புகள் பறிபோகின்றன என்றும் பிரிட்டிஷ் மக்களின் பெரும்பாலானவர்கள் எரிச்சலடைந்துள்ளனர். எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சியின் தலைவர் நிய்க் பௌல் மற்றும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கியத்தலைவர்கள் பலரே பிரிட்டிஷ் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதை ஆதரிக்கின்றனர். ஆனால், பிரதமர் டேவிட் கேமரூன் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டிஷ் நீடிப்பதை விரும்புகிறார். மக்களிடம் இதுகுறித்து கோரிக்கையும் வைத்துள்ளார். இதனால், தேர்தல் முடிவுகள் பிரிட்டன் மட்டுமல்ல, கேமரூனின் அரசியல் எதிர்காலத்தையும் முடிவு செய்வதாக இருக்கும்.

தேர்தலுக்கு முன்பான கருத்துக்கணிப்பில் 54% பேர் ஐரோப்பிய யூனியனில் நீடிக்க ஆதரவு அளித்துள்ளன. ஐபோ – எம்.ஓ.ஆர்.ஐ இந்த கருத்துக்கணிப்பைச் செய்துள்ளது. ஒபாமா, ஜு ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் இணைந்தே இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். பிரிட்டன் வெளியேறும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றியத்தில் வெளியேறிய முதல்நாடு பிரிட்டன் ஆகும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share