தேர்தலுக்குப் பின்பு அமையவுள்ள கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவிக்கு வலியுறுத்தாது என்ற பொருள்படும் வகையில் குலாம் நபி ஆசாத் கூறிய கருத்தை நேற்று மறுத்துள்ளார்.
சிம்லாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் மே 16ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், “மாநிலக் கட்சிகளை இணைத்து, காங்கிரஸ் கட்சியின் தலைமையில் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை” என்றார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான குலாம் நபி ஆசாத்தின் இக்கருத்து, ராகுலைப் பிரதமராகக் காண காத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே குழப்பத்தை உண்டாக்கியது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்கும் என்ற தொனியில் தான் அந்தக் கருத்தைக் கூறவில்லை என்று குலாம் நபி ஆசாத் நேற்று (மே 17) ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “காங்கிரஸ் பிரதமர் பதவியை கேட்டு வலியுறுத்தாது என்று கூறியது உண்மையல்ல. பிரதமர் பதவியைப் பெறுவதில் காங்கிரஸுக்கு ஆர்வம் இல்லை என்ற செய்தியும் உண்மை அல்ல. இந்த நாட்டின் பெரிய மற்றும் பழமையான கட்சி காங்கிரஸ். மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற வகையில் அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி நடத்த வாய்ப்பு கிடைத்தால் இயக்குவோம்” என்றார்.
பாஜகவுக்கு எதிரான அனைத்து மாநிலக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டத்தை நடத்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23ஆம் தேதி இரவு உணவு விருந்தோடு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. சில மாநிலக் கட்சிகளிடமும் பிரதமர் பதவிக்கான குரல்கள் எழுந்துவரும் நிலையில், குலாம் நபி ஆசாத் கடந்த இரண்டு நாட்களாகக் கூறிவந்த இக்கருத்தை அக்கட்சிகளும் கவனித்து வருகின்றன.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ரித்தீஷ் மனைவி மீது புகார்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/51)
**
.
**
[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)
**
.
**
[ரவீந்திரநாத் எம்பி: கல்வெட்டில் பெயர் மறைப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/56)
**
.
.
�,”