பிரச்னைகளுக்குத் தீர்வு தற்கொலை இல்லை : தம்பிதுரை

Published On:

| By Balaji

தமிழக விவசாயிகள் பிரச்னைகளுக்கான தீர்வு தற்கொலை கிடையாது என, மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கடந்த 12 நாட்களாக தமிழகத்துக்கு வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி, தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் தங்கள்மீது திரும்பும்வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை 3 பேர் திடீரென அங்குள்ள மரத்தின் மீது ஏறி தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு, நடிகர் விஷால் உள்ளிட்டவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்கள் தற்கொலை முயற்சியை கைவிட்டு கீழே இறங்கினர். இதுகுறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், ‘தற்கொலை செய்துகொள்வது பிரச்னைக்கு தீர்வாகாது. கண்டிப்பாக விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க பாடுபடுவோம் என உறுதியளிக்கிறோம். எனவே, தற்கொலை முயற்சியை விவசாயிகள் கைவிட வேண்டும் எனக் கூறினார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment