இரண்டு கேரட்டை எடுத்து அதை வேகவைத்து மசித்து, முகத்துக்குத் தடவ வேண்டும். பின்னர் அதைக் காயவைத்து, முகத்தில் இருந்து உரித்து எடுக்க வேண்டும். அதன்பின் வெதுவெதுப்பான நீரால் முகத்துக்கு ஒத்தடம் தர வேண்டும். இவ்வாறு வாரத்துக்கு இருமுறை செய்தால், முகம் நன்கு பொன்னிறமாக மின்னும்.
தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸை பருகினால், சருமத்தில் எந்த நோயும் ஏற்படாமல் இருக்கும். அதுமட்டுமல்லாமல், முகச்சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.
கேரட்டில் சர்க்கரை சேர்த்து, நன்கு நைஸாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்குத் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்துக்குச் சரியான ரத்த ஓட்டம் இருக்கும். மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம், முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் மற்ற சரும நோய்களை நீக்கி, சருமத்தை மென்மையாக அழகாக வைக்கும்.
சம அளவு கேரட் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாகக் கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
கொதிக்க வைத்த கேரட் சாற்றினை ஆறிய பின் முகத்திலும், உடம்பிலும் தேய்த்துக் குளிக்க, முகமும், தேகமும் பளபளப்பாகும்.
கேரட்டில் உள்ள பொட்டாடிசியம், வைட்டமின் ஏ போன்றவை உடலின் நச்சுக்கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால் முகப்பரு, கரும்புள்ளி உள்ளிட்ட சரும நோய்கள் ஏற்படுவதில்லை. தினசரி கேரட் ஜூஸ் குடித்து வர கோடைக்காலத்தில் ஏற்படும் சருமநோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
கோடையில் முகம் கருமையாவதை தடுக்கும். முகச்சுருக்கம் ஏற்படாமல் சருமம் பாதுகாக்கப்படும். கேரட்டைத் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் சருமப் பாதுகாப்பிற்காக விலை உயர்ந்த ரசாயனப் பொருள்கள் வாங்காமல் தவிர்க்கலாம்.�,