தலைமுடி நன்றாக வளர சிலர் மொட்டை அடித்துக்கொள்வது உண்டு. எப்படி புதிய செல்கள் தோன்றி அதிகமாக தலையில் முடி வளர்கிறதோ, அதைப்போன்றுதான் உதட்டின் மேல் உள்ள முடிகளும். பார்லருக்குச் சென்று பிடுங்குவதால் தற்காலிக தீர்வே கிடைக்கும். வீட்டில் இருக்கும் ஒருசில இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி, உதட்டுக்கு மேல் மாஸ்க் போட்டுவந்தால், அவ்விடத்தில் முடியின் வளர்ச்சி தடைப்பட்டுவிடும். இயற்கையான வழியை மேற்கொண்டு உதட்டின் மேல் உள்ள முடிகளை நீக்குவதைப் பற்றி இன்று காணலாம்.
**தயிர்:**
தயிரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, உதட்டுக்கு மேல் தடவி 15-20 நிமிடங்கள் ஊறவைத்து, பின் கையில் தண்ணீரை நனைத்து உதட்டின் மேல் சிறிது நேரம் தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்துவந்தால் உதட்டின் மேல் வளரும் முடியை நீக்குவதோடு, அதன் வளர்ச்சியையும் தடுக்கலாம்.
**சர்க்கரை:**
எலுமிச்சை சாற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாணலியில் வைத்து ஒரு நிமிடம் கிளறி, பின் அதை இறக்கி குளிர வைத்து, காட்டன் பயன்படுத்தி உதட்டின் மேல் தடவி வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். இதனாலும் முடியை நீக்கலாம்.
**மைதா/கோதுமை மாவு:**
உதட்டின் மேல் வளரும் முடியை நீக்க மஞ்சள் மிகவும் சிறப்பான பொருள். ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை மைதா/கோதுமை மாவுடன் சேர்த்து, பால் ஊற்றி பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, உதட்டின் மேல் பகுதியில் தடவி அரை மணி நேரம் வறட்சியடையும் வரை ஊற வைக்க வேண்டும். பின் கையை நீரில் நனைத்து, காய்ந்த பகுதியை வட்ட வடிவில் தேய்த்து கழுவ வேண்டும்.
**பால்:**
மஞ்சள் தூளைப் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அந்தக் கலவையை உதட்டுக்கு மேல் பகுதியில் தடவி உலர வைத்து, பின் அதை மேலும் கீழுமாகத் தேய்த்து கழுவ வேண்டும்.
**முட்டையின் வெள்ளைக்கரு:**
உதட்டுக்கு மேல் மீசை போன்று வருவதை நீக்க முட்டையின் வெள்ளைக்கரு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ஒரு டேபிள்ஸ்பூன் மைதாவுடன், சர்க்கரை மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து, உதட்டுக்கு மேல் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து தேய்த்து கழுவ வேண்டும். இதனாலும் உதட்டுக்கு மேல் வளரும் முடியை நீக்கலாம்.
**எலுமிச்சை:**
எலுமிச்சையைச் சாறு எடுத்து, அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, அதை உதட்டுக்கு மேல் பகுதியில் தடவி உலர வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனாலும் முடி வளர்வது தடைபடும்.
�,