– ஸ்பிளாக்கர்
அடா அடா அடா… இப்படியெல்லாம் ஒரு சிச்சுவேஷன் வரும்னு யாராவது எதிர்பார்த்தோமா?
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சில நடக்குறதைத்தான் சொல்றேன்.
பிக் பாஸ் பெயரைக் கேட்டாலே நினைவுக்கு வர்ற மாதிரி சர்ச்சைகளைத்தான் இதுவரைக்கும் அந்த நிகழ்ச்சி கடந்து வந்திருக்கு. அது காயத்ரி காட்டுன அட்டிட்யூடா இருக்கட்டும்; ஓவியா செய்த களேபரங்களா இருக்கட்டும்; தாடி பாலாஜி வெளிப்படுத்துன எரிச்சல்களா இருக்கட்டும்; பிக் பாஸ்னு சொன்னாலே இந்த மாதிரி நெகட்டிவ் வைப்ரேஷனே அதிகமா நம்மளைத் தாக்கக்கூடும். ஆனால், சீசன் 3 நிகழ்ச்சியில் நடக்கும் விஷயங்கள் எல்லாமே ஓர் அழகியலோட வெளிப்பாடாவே இருக்குறது ஆச்சர்யம். அது கண்களால் பார்க்கப்படும் அழகியல் இல்லை. இவர் என்ன பண்ணுவாரோ, அந்தம்மா என்ன பேசுமோன்னு ஒருவித பதற்றத்துலயே இல்லாம, ரிலாக்ஸா உக்காந்து பார்க்கக்கூடிய சூழலை உருவாக்கியிருக்காங்க இந்த வருட பிக் பாஸ் கண்டெஸ்டண்ட்ஸ். முக்கியமா நன்றி சொல்ல வேண்டியது கவினுக்கும், சாண்டிக்கும் தான்.
இத்தனை கோடி மக்கள் பார்க்கும் நிகழ்ச்சின்னு தெரிஞ்சதால ஆரவ் எப்படி தன்னுடைய ஈர்ப்பை வெளிப்படுத்த தயங்கினாரோ, முகேன் எப்படி தயங்கிக்கிட்டு இருக்காரோ, அப்படியெல்லாம் இல்லாமல், தனக்கு சரின்னு படுறதை தொடர்ந்து செய்றதும் இதைத்தான் பண்றேன்னு தெளிவோட இருக்குறதும் கவினோட ப்ளஸ் பாயிண்டா இருக்கு. கவின் செய்றது சரி, தப்புன்றதை விட இது வெளிய தெரிய காரணமே வனிதா எலிமினேட் ஆனது தான். அதை மக்கள் செய்தார்களா, இல்லை பிக் பாஸ் டீமே செய்ததான்னு ஒரு குழப்பம் இருந்தாலும் இப்ப பிக் பாஸ் போகும் ரூட் சிறப்பானது.
முகேன் – அபிராமி இடையே நடக்கும் செல்ல சீண்டல்கள், ஷெரின் பக்கத்துல தர்ஷன் போனாலே ஏதாவது பிரச்சினையைக் கெளப்புற மீரா மிதுன், லாஸ்லியா – கவின் – சாக்ஷி ஆகிய மூணு பேருக்குள்ள நடக்குற பனிப்போர் ஆகிய விஷயங்கள் மிக முக்கியமானது. வனிதாவுடைய வெளிநடப்பும், கவினுடைய கேரக்டர் வெளியே தெரிய ஆரம்பிச்சதும் கோ-இன்சிடன்ஸ் கிடையாது. வனிதாவைச் சுத்தியே கேமராவும், கேரக்டர்களும் நடத்தப்பட்டதால கவினுக்கு எந்த பிரச்சினையும் இல்லாம எல்லா பக்கமும் கடலை போட்டுக்கிட்டே வந்தார். சாக்ஷி, வனிதா கூடவே இருந்ததாலவும், லாஸ்லியா அந்தப் பக்கம் போகாததாலயும் அவங்களுக்குள்ள எந்த தகவலும் பகிரப்படவில்லை. ஆனால், வனிதா போனதும் விஷயம் தலைகீழா மாறுச்சு. சோபால உக்காந்துக்கிட்டு, “கடினமான காம்படீடரையே தூக்கிட்டாங்களே, இந்த ஷோ இனி எப்படி மாறப்போகுது” என கவின் கவலைப்பட்டது எதற்காகன்னும் இப்ப நடக்குற விஷயங்கள் தெளிவா காட்டுது.
‘நீயா? நானா?’ போட்டியின்போது “இங்க இருக்குறது வெறும் நட்பு இல்லை. அதையும் தாண்டி புனிதமானது” அப்படின்னு அபிராமி ஒரு டீம்ல இருந்துக்கிட்டு சொல்ல, “எங்க இது இல்லைன்னு முகேனை சொல்ல சொல்லுங்க பாப்போம்” என சேரன் சொன்னது மிகப்பெரிய தவறு. விளையாட்டுல நடக்கும் போட்டிக்காக இரண்டு பேருக்கு இடையே இருக்கும் பர்சனல் மேட்டரை பலிகடாவா கொண்டு வர்றது சேரனுடைய நிலைக்குச் சரியானதா?
சேரன் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக முகேன் பேசியபோது “இது வெறும் நட்புதான்” என்று சொன்னதால தான் காயப்பட்டதாக அபிராமி குறிப்பிட்டார். அதன்பிறகு தான் தன்னைப் பற்றி மேலும் விளக்கம் கொடுக்க வேண்டிய சூழலுக்கு முகேன் போனதுக்குக் காரணம் சேரன். முகேன் மட்டுமில்லை, பிக் பாஸ் சீசன் 3-யின் ரொமாண்டிக் ஜோடிகளில் இடம்பெறாத சரவணன், மதுமிதா, ரேஷ்மா ஆகிய பலருக்கும் இவர்களுடைய இந்தக் கொண்டாட்டம்தான் முக்கியமான டார்கெட். தர்ஷனுக்கு ஷெரின் முத்தம் கொடுக்கணும்னு டாஸ்க் கொடுத்தப்ப, ‘இதுவே எனக்குக் கொடுக்க சொல்லியிருந்தா கஷ்டமான காரியம்னு சொல்லலாம்’ என சேரன் குறிப்பிட்டபோது, ‘ஏன் கொடுத்திருக்க மாட்டேனா?’ என சேரனை அதிரவைத்தார் ஷெரின். வெறும் முத்தத்தில் என்ன இருக்கிறது என ஷெரின் நினைத்திருக்கலாம். ஆனால், சேரன் வளர்ந்த காலம் வேறு, இந்த சமூகத்தை அவர் அணுகும் கோணம் வேறு என்பதால் அவருக்கு அதில் சிறு அதிர்வு. அதேபோல, ஏதாவது கிரிக்ட்டிக்கலான பிரச்சினை என்றால் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் வந்து பேசுவார்கள். பஞ்சாயத்து செய்து வைக்க வேண்டும் என்பதாலேயே சில மூத்தவர்களையும் உள்ளே கொண்டு வருவதாக மக்கள் நினைத்தனர். ஆனால், இங்கு நடப்பதோ வித்தியாசமானது.
தர்ஷன் மீராவைக் கூப்பிட்டு பேசிவிடுகிறார். இந்த கவின், லாஸ்லியாவையும், சாக்ஷியையும் அழைத்து நான் உன் கூட பழகுறேன். நீ என்னோட பேசு. ஆனால், இதை எந்த ரிலேஷன்ஷிப்புக்குள்ளவும் வைக்க வேண்டாம் என சொல்லிவிடுகிறார். அபிராமியும், முகேனும் கண்ணாலேயே பேசிக்கொள்கிறார்கள்; பிரச்சினையே வரவில்லை. ஆக, வீட்டின் மூத்தவர்கள் டம்மியாக்கி விடப்பட்டதால் ‘நீயா? நானா?’ புரொகிராமை கமல் இல்லாத வீக் எண்ட் பிக் பாஸ் போல நடத்திவிட்டார்கள்.
வரும் வாரங்களில், இந்த ரொமான்டிக் சீனுக்குள்ள வராத சிலர் எலிமினேட் ஆகும் பட்சத்துல, காதல் மழையை பிக் பாஸ் வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் தூவிக்கிட்டே இருக்கும் ஜோடிப் புறாக்கள், அந்த அன்பினால் திக்கு முக்காடிப்போகும் சூழல் உருவாகும். இப்போதைக்கு இந்த சூழல் நல்லா இருக்கு. சின்னப் பசங்கன்னு சொல்லக்கூடியவர்கள் உக்காந்து பேசி தங்களுக்குள்ள இருக்கும் பிரச்சினைகளை புரிஞ்சிக்க முயற்சி பண்றது வரவேற்கத்தக்க விஷயம். இந்த ஆட்டத்தைக் கலைக்க உள்ளே இருக்கும் யாராலேயும் முடியாது. ஆனால், எக்ஸ்ட்ராவா உள்ளே அனுப்பப்படக்கூடிய ஆட்களால எந்தப் பக்கம் பலம் அடையப்போகுதுன்னு தெரியாததால, இப்போதைக்கு இந்த காதல் பனிப் போரை உக்காந்து அமைதியா ரசிக்கலாம்.
ஆமா, சாண்டி பத்தி எழுத மறந்துட்டேன்ல. அதைத் தனியா ஒரு பாராட்டுப் பத்திரமாவே எழுதிடலாம்.
**
மேலும் படிக்க
**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**
**[மாசெக்களுக்கு தெரியாமல் உதயநிதி நடத்தும் புது ஆபரேஷன்!](https://minnambalam.com/k/2019/07/18/45)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
�,”