கவின் அஞ்சு லட்சம் வாங்கிக்கிட்டு பிக் பாஸை விட்டு வெளியப் போறது சுயநலமாம். அவனுக்காக அழுவுற லாஸ்லியா கண்ல தண்ணி வல்லயாம். சரி, இதைத்தாண்டி உனக்கு வேற என்னடா பிரச்சினைன்னா, நைட்டு சோத்துக்கு சீக்கிரம் போவலைன்னா பொண்டாட்டி குண்டான்ல தண்ணிய ஊத்திருமாம். போகும்போது, தெரு முனைல இருக்க கடன் காரன் கண்ணுல பட்டுடக்கூடாதாம். பிக்பாஸாவது குடுக்குறேன்னு சொன்ன மாதிரி அஞ்சு லட்சத்தை குடுத்துருவாரு. ஆனா, உண்ட 15 லட்சம் தர்றேன்னு ஒரு பிக் பாஸ் கதை உட்டுட்டு இதுவரைக்கும் கண்ல படாம சுத்திட்டே இருக்காரே ஏன்னு இதுவரைக்கும் கேட்டியான்னு கொஸ்டின் பண்ணா, அட போடா நம்ம சொன்னா அரசியல்வாதிங்க மாறிடுவாங்களான்னு கேக்குறான். இவன் யார் தெரியுமா மக்களே! காப்பான் படம் பாத்துட்டு, விவசாயத்தை காப்பாத்த போறேன்னு யூடியூப்ல அரிசி உருவாவது எப்படின்னு தேடுனவன் தான். அப்படிப்பட்ட காலத்துல உனக்கு எதுக்கு ஸ்மார்ட்ஃபோனுன்னு தட்டிவிட்டேன். கீழ விழுந்து உடஞ்சிருச்சு. இப்ப ரிப்ளேஸ்மெண்ட் வாரண்டி கிளைம் பண்ண போய்ட்டு இருக்கேன். நீங்க அப்டேட்டைப் படிங்க வந்துடுறேன்.
**அன்புடன்@aishu**
இணைய முடியாதது தான இணையம்
**EzhisaiVelan**
வெற்றிகளை மட்டுமே
சந்திக்க விரும்புகின்றோம்.
ஆனால் தோல்விகளை மட்டும்
எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கின்றோம்
This girl ???????????????????????? pic.twitter.com/5M3x4Mg4V1
— Haritha Varanasi (@vharitha17) September 26, 2019
**நிலாப்பெண்**
தேவைக்கு வரும் உறவுகளையும்
தேவையில்லாத உணர்வையும்
ஒதுக்கி வைத்தால்
வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்
**ரோசாப்பூ தையல்காரன்**
பேரிரைச்சலை உணர்ந்த
காதுகளால் மட்டுமே
பேரமைதியையும் உணரமுடியும்!
**ஏமாளி**
பணிதலுக்கும்…!!!
அடங்குதலுக்கும்…!!!
வேறுபாடு
உண்டு…!!!
இது என்னடா புதுசா இருக்கு…
விஜய், அட்லீ, ஏ. ஆர். ரகுமான் க்கு படம் ஹிட் ஆகனும்.
புரெடியுசர்க்கு படம் ப்ளாப் ஆகனும்…. ???? ???? pic.twitter.com/yYQsUmKL8k
— Dr.கவுண்டர்மஹான் பக்தன் ™ (@goundarvotary) September 25, 2019
ரா.சரவணன்****
“வேளாண்மையை வணிகமா நினைக்கிற அத்தனை பேரும் கோடீஸ்வரனா இருக்கான். வாழ்க்கையா நினைக்கிற விவசாயி மட்டும் தெருக்கோடில நிக்கிறான்…”
**செந்திலின்_கிறுக்கல்கள்**
இராணுவத்தில் இருப்பவர்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருக்க வேண்டிய சூழ்நிலையிலும் தொடர்பு எல்லையை தாண்டியே இருக்கிறார்கள்!
**அரஸ்**
நீங்கள் ஒரு நபருக்கு
பயனற்றவராக உணரலாம்..
ஆனால் நீங்கள் எப்போதும் மற்றொருவருக்கு விலைமதிப்பற்றவராக இருப்பீர்கள்.
**செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்**
பொருட்களில் தொடங்கிய
Use and throw’ கலாச்சாரம்
இப்போது மனிதர்களில்
முடிந்திருக்கிறது..!
**Hasan Kalifa**
தாயை மகிழ்விக்க,அவங்களுக்கு பிடிச்சதை அவங்களுக்கு வாங்கி தருவதை காட்டிலும்,நமக்கு பிடிச்சதை நாம் வாங்கிட்டாலே போதும்.
**ச ப் பா ணி**
ரத்தமும் பணமும் ஒரே குணமுடையவை.இரண்டும் சுழற்சியில் இருந்தால்தான் ஆரோக்கியம்
-இறையன்பு
???????????????? pic.twitter.com/mXD1wPjoCu
— ஆஹான்!! ???? (@Kadhar_Twitz) September 26, 2019
**நவீணா **
கைதவறி விழும்
கண்ணாடியாய் மனது.. அவ்வப்போது
என்னவென்று புரியாமல்
தனிமையின் தாழ் திறக்கும்
நேரங்களில்..
அமைதியின் வெளிச்சம் பெற,
தேவையெல்லாம் மகிழ்வை
திறக்கும் ஒற்றை நொடியே..
**м υ я υ g α η . м**
பிடித்ததாயும் இல்லை
பிடிக்காததாயும் இல்லை.. விரும்பியதாயும் இல்லை விரும்பாததாகவும் இல்லை.. ஏற்றுக்கொண்டதாகவும் இல்லை ஏற்றுக்கொள்ளாததாகவும் இல்லை.. பிறகெதற்க்கு இந்த வெற்றுச் சிந்தனை உணர்ச்சிகளையெல்லாம் சூழ்ந்து கொள்ளுமளவிற்க்கு..
**ரா புவன்**
“புள்ளிங்கோ”
சப்போர்ட்டும் செய்யமுடியாத, எதிர்த்தும் குரல் கொடுக்க முடியாதவர்கள்தான் இந்த “புள்ளிங்கோ”. கேலி பேசுபவர்கள் எல்லாரும் புள்ளிங்கோ என சில புகைப்படங்களைப் பகிர்கையில், உருவக்கேலி, அவர்கள் இருப்பிடத்தைப் பற்றிய கேலியெல்லாம் பார்த்துக் கோவம் வரத்தான் செய்தது.
ஆனால் கேலி பேசுபவர்களை எதிர்க்கமுடியாத அளவிற்குதான் “புள்ளிங்கோ”ளின் செயற்பாடுகளும் இருக்கும். என் மச்சான் கிட்டான் விவரித்திருந்தான், சாதிப்பாசம் பேசுகிற வீண் ஜம்பம் காட்டுகிற பிற மாவட்டத்தவரும் புள்ளிங்கோதான் என்று. இதில் என் பார்வை சற்றே மாறுபடுகிறது. இந்தப்புள்ளிங்கோ செய்வதெல்லாம் என்ன? காவாளித்தனம். காவாளித்தனம் யார் செய்தால் என்ன, இழுத்துப்போட்டு சாத்தவேண்டியதுதானே?
Trollersகளில் சிலர் கிடைத்ததுதான் சாக்கு என வடசென்னைக்காரர்களைக் கலாய்க்கிறார்கள். ஆனால் இதே Trollers தான் நெல்லையில் ஒரு Cinthol சோப் வாய் மாணவனைக் கலாய்த்ததும். இதே Trollersகள்தான் அந்தந்த trendல் ஒரு mob mentalityல் எல்லாரையும் கடித்துவைத்துக்கொண்டு இருப்பவர்களும்.
எனவே அது சாதிப்பெருமையோ, பயங்கரமான புள்ளிங்களோ, காவாளித்தனம் காவாளித்தனமே. எவனுக்கும் எதிர்காலத்தைப்பற்றிய கவலையெல்லாம் இல்லை. எனவே ஒன்று நாமும் அந்த Mob mentality மெண்டலான்களுடன் ஐக்கியமாகலாம். இல்லையென்றால் எதிர்க்கருத்துகள் பகிர்ந்துகொண்டிருக்கலாம். என்னை மாதிரி வாய்மூடி வேடிக்கை பார்த்துக்கடந்தும் செல்லலாம்.
Your choice will determine your destiny
**நாட்டுப்புறத்தான்**
அனைவருக்கும் தேநீர் கொடுங்கள்…
– மார்க்ஸ்!
அதை ஒரே மாதிரியான குவளையில் கொடுங்கள்…
– அம்பேத்கர்!
அதை ஒரே அளவில் கொடுங்கள்…
– பெரியார்!
அதில் முதல் குவளையைப் பசியோடு இருப்பவனுக்கு கொடுங்கள்…
-கலைஞர்!
-லாக் ஆஃப்.
�,”