பா.ரஞ்சித்துக்கு காங்கிரஸ் ஆதரவு!

Published On:

| By Balaji

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராஜராஜ சோழன் பட்டியலின மக்களின் நிலங்களை பிடுங்கியதாகவும், அவரது ஆட்சிக் காலம் இருண்டகாலம் எனவும், சாதிரீதியிலான ஒடுக்குமுறை தொடங்கியதாகவும் இயக்குநர் பா.ரஞ்சித் கடுமையாக விமர்சித்தார். இது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பாக திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஞ்சித் மீது சாதி, மத, இன ரீதியிலான மக்களை பிளவுபடுத்தும் வகையிலான பேச்சு, கலவரத்தை தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் கவிதா தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளார்.

திருப்பனந்தாள் காவல் துறையினரின் நடவடிக்கையை எதிர்த்து நீலப்புலிகள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இயக்குநர் ரஞ்சித் நேற்று (ஜூன் 12) மனுத் தாக்கல் செய்தார். அம்மனுவில், “எனது பேச்சு எந்தத் தரப்பு மக்களிடமும் பிரிவினையை ஏற்படுத்தவில்லை. பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிட்டுள்ள தகவல்களையே நானும் குறிப்பிட்டேன். எனது பேச்சு சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. நில உரிமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலேயே பேசினேன். ஆகவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், ரஞ்சித்தின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலித் பிரிவு ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலித் பிரிவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சாதியத்தை எதிர்த்து பா.ரஞ்சித் தொடர்ந்து போராடி வருவது மிகவும் சிறப்பானது. நாங்கள் ரஞ்சித்துடன் உறுதியாக நிற்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**

**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**

**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**

**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share