யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ஃபேண்டஸி கலந்த அரசியல் – காமெடிப் படமான தர்மபிரபு படத்தின் ட்ரெய்லர் நேற்று (ஜூன் 22) வெளியாகியுள்ளது.
முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு, ரமேஷ் திலக், அழகம் பெருமாள், ராதா ரவி, ரேகா, ஜனனி ஐயர், சாம் ஜோன்ஸ் நடித்திருக்கும் படம் தர்மபிரபு. கடந்த மார்ச் மாதம் வெளியான இதன் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நேற்று (ஜூன் 22) வெளியான இதன் ட்ரெய்லரும் ரசிக்கும்படி அமைந்துள்ளது.
வாரிசு அரசியல், தமிழ்மொழி மீதான ஆதிக்கம், எமலோகத்தை மேம்படுத்த அம்பேத்கர், பெரியார், நேதாஜியிடம் ஆலோசனை கேட்பது, பூமிக்கு வரும் எமன் அரசியல் நிலவரங்களைப் பார்ப்பது என நகைச்சுவையும் அரசியல் நையாண்டியும் கலந்த கலவையாக அனைவரும் ரசிக்கும்படி வந்துள்ளது இந்த ட்ரெய்லர்.
ஜூன் 28ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் யோகி பாபு எமலோகத்தில் எமதர்மனாக நடித்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஸ்ரீ வாரி பிலிம்ஸ் சார்பில் பி.ரங்கநாதன் தயாரித்திருக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சான் லோகேஷ் இசையமைத்துள்ளார்.
[தர்மபிரபு ட்ரெய்லர்](https://www.youtube.com/watch?time_continue=1&v=AKAq7iDUxrs)
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சோனியா கோரிக்கை… ஸ்டாலின் நிராகரிப்பு!](https://minnambalam.com/k/2019/06/22/70)**
**[அந்த ஜாம்பவான் போகட்டும்: தங்கத்தை சாடும் தினகரன்](https://minnambalam.com/k/2019/06/22/64)**
**[பாஜகவைத் தொடர்ந்து எதிர்ப்பேன்: தினகரன்](https://minnambalam.com/k/2019/06/22/23)**
**[காலேஸ்வரம் திட்டம்: ஆட்டத்தை மாற்றும் அற்புதம்!](https://minnambalam.com/k/2019/06/22/4)**
**[ஜூலை 1 : சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்!](https://minnambalam.com/k/2019/06/21/69)**
�,”