|பாலூட்டும் அறைகளைத் தவிர்க்கும் தாய்மார்கள்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகளைப் பயன்படுத்தப் பெண்கள் தயங்குவதாக ஆய்வு ஒன்றின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

பாலூட்டும் பெண்கள் பணி மற்றும் பயண நிமித்தமாக வெளியே செல்லும்போது பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டியிருக்கும். அவ்வாறு பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளையில் பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுக்குப் பாலூட்டும் வகையில் பேருந்து நிலையங்களில் தனி அறைகள் கட்டப்பட்டு 2015ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதாவால் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. ‘உலக தாய்ப்பால் ஊட்டும்’ வாரமான ஆகஸ்ட் முதல் வாரத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 352 பேருந்து நிலையங்களில் தாய்மார்களுக்கான தனி பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டன. அங்கு சுகாதாரமான குடிநீர், அமரும் இருக்கைகள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் அமைக்கப்பட்டன. ஆனால், பாலூட்டும் அறைகள் போதிய அளவில் பராமரிக்கப்படாமல் இருப்பதால் அவற்றைப் பயன்படுத்த பெரும்பாலான பெண்கள் தயங்குகின்றனர். வேறு சில காரணங்களாலும் அவற்றைப் பயன்படுத்தாமல் பெண்கள் தவிர்க்கின்றனர்.

சென்னையை மையமாகக் கொண்ட *டி.என். ஃபோர்ஸ்* நிறுவனம் சார்பாகப் பாலூட்டும் அறைகளின் பயன்பாடு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன் தொடர்பான சேவையில் ஈடுபட்டுவரும் இந்நிறுவனத்தின் ஆய்வுப்படி, பெண்கள் கூச்சம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காகப் பாலூட்டும் அறைகளைப் பயன்படுத்தத் தயங்குவதாகத் தெரியவந்துள்ளது. சில பெண்களுக்குப் பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறைகள் இருப்பது குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. சில அறைகள் போதிய வசதிகள் மற்றும் பராமரிப்பு இல்லாமல் மூடிக்கிடப்பதாகவும், கழிப்பறைகளுக்கு அருகில் சுகாதாரமாக இல்லாமல் இருப்பதாகவும் பாலூட்டும் பெண்கள் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து ரயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் பாலூட்டுதல் ஆலோசகரும் பிரசவ கல்வியாளருமான ரேகா சுதர்ஷன், *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் பேசுகையில், “இந்தப் பாலூட்டும் அறைகளைப் பயன்படுத்தப் பெண்கள் பயப்படுகின்றனர். அங்கு சிசிடிவி கேமராக்கள் இருக்கலாம் எனவும் அஞ்சுகின்றனர். எனினும் சில பெண்கள் இந்தப் பாலூட்டும் அறைகளைப் பயன்படுத்துகின்றனர். இது அவர்களுக்கு ஏதுவாகவும் இந்த வசதி மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுவிடங்களில் இதுபோன்ற பாலூட்டும் அறைகள் ஒன்றாவது இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அரியலூர், சென்னை, ஜெயங்கொண்டான், சிதம்பரம், வடலூர், காட்டுமன்னார் கோவில், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் சுமார் 21 பாலூட்டும் அறைகளை ஆய்வு செய்த டி.என்.ஃபோர்ஸ் நிறுவனம் இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: காந்தியை நம்பும் ஏசிஎஸ்- சித்தரை நம்பும் துரைமுருகன் -விரக்தியில் திமுகவினர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/07/31/60)**

**[தற்கொலைக் கடிதமும் வருமான வரித் துறை விளக்கமும்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/07/31/57)**

**[முடிவுக்கு வந்த நேர்கொண்ட பார்வை பிசினஸ்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/01/22)**

**[முதல்வரைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/01/19)**

**[சித்தார்த்தா மரணத்தில் நீடிக்கும் சர்ச்சைகள்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/01/25)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/07/13/17)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel