`பாலஸ்தீனம் செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, இன்று (பிப்ரவரி 10) பாலஸ்தீனம் நாட்டுக்குச் செல்கிறார். அந்நாட்டு அதிபர் மஹ்மூத் அப்பாஸைச் சந்தித்து, இரு நாட்டு உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதன் மூலமாக, பாலஸ்தீனத்திற்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார் மோடி.

பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட், ஓமன் ஆகிய நாடுகளுக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர். நேற்று, அவர் ஜோர்டான் சென்றார். அந்நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லாவை ஜோர்டான் அரண்மனையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனையடுத்து, இன்று காலை அவர் பாலஸ்தீனம் புறப்படுகிறார். ஜோர்டான் அரண்மனை விமானம் மூலமாக பாலஸ்தீனம் செல்லும் மோடி, அங்குள்ள ரமல்லா, மேற்குக்கரை ஆகிய நகரங்களைப் பார்வையிடுகிறார். இந்தப் பயணத்தில் இந்தியா – பாலஸ்தீனம் இடையிலான ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

தனது சுற்றுப்பயணம் குறித்து மோடி வெளியிட்டிருந்த அறிக்கையில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிப்பதிலும் அந்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதிலும் இந்தியா உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். தற்போதைய சுற்றுப்பயணத்தில், பாலஸ்தீனத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி விவாதிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றார். இதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்து சென்றார். அப்போது, இந்தியாவுடனான உறவில் இஸ்ரேல் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான உறவு சிதைந்துள்ள நிலையில், தற்போது பிரதமர் மோடி பாலஸ்தீனம் செல்வது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், இந்தியப் பிரதமர் ஒருவர் பாலஸ்தீனத்திற்குச் செல்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

�,

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts