பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு பிரெய்லி வாக்குச்சீட்டு!

Published On:

| By Balaji

மேகாலயாவில் மக்களவைத் தேர்தலில் பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்களும் வாக்களிக்கும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது பிரெய்லி முறை வாக்குச்சீட்டுகள் ஓட்டப்பட்டுள்ளன என மேகாலயா தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேகாலயாவில் மே 11ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு 100 சதவிகிதம் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளில் அதிக நேரம் காத்திருக்காமல் விரைவில் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோன்றுதான், பார்வைத் திறன் குறைபாடுள்ளவர்களுக்கும் பிரெய்லி வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்தி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேகாலயா தலைமைத் தேர்தல் அதிகாரி கர்கோங்கர் கூறுகையில், மேகாலயாவில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக பிரெய்லி வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படுகிறது. மொத்தம் 4,500 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்கள் உள்ளனர். 800க்கும் மேற்பட்ட பார்வை திறன் குறைபாடு கொண்ட வாக்காளர்கள் வாக்களிக்க பிரெய்லி வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள், ஆகியவை பிரெய்லி முறையில் அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டு ஒட்டப்பட்டிருக்கும். இதனால், யாருடைய உதவியும் இன்றி அவர்கள் தாங்களாகவே வாக்களிக்க முடியும்.

சமூக ஆர்வலர்கள் முன்வந்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாகக் கூறினார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share