]பார்க்கிங் இடமாகும் பள்ளிக்கூடம்!

public

70 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருப்பூர் மாவட்டம் முத்துபுதூர் பள்ளிக்கூடத்தை இடித்துவிட்டு பார்க்கிங் இடம் அமைப்பதற்கான அரசின் திட்டத்துக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

திருப்பூர் பல்லடம் சாலையில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியானது 1949ஆம் ஆண்டில் திருப்பூரின் தந்தை என அழைக்கப்படும் கே.என்.பழனிச்சாமி கவுண்டர் தலைமையில் திறக்கப்பட்டது. அப்போது 800க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்ற இப்பள்ளியில் இப்போது 196 மாணவர்கள் மட்டுமே இருக்கின்றனர். எல்.கே.ஜி. முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கல்வி வழங்கும் இப்பள்ளியை இடித்துவிட்டு பேருந்து நிலையத்துக்கான பார்க்கிங் இடத்தை அமைக்க அரசு முடிவுசெய்துள்ளது. முத்துபுதூர் பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.36.5 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான இடம் போதாமல் இருப்பதால் அருகிலுள்ள பள்ளிக்கூடம் உட்பட சில இடங்களை இடித்துவிட்டு பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

70 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தப் பள்ளிக்கூடத்தை இடிப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுபோன்ற முடிவுகளை மேற்கொள்ளும்போது பள்ளிக்கூடம் சார்ந்த பங்குதாரர்களிடம் ஆலோசனை செய்ய வேண்டும் என்பதே அவர்களது வாதம். ஆனால், இந்த நிலம் மாநகராட்சிக்குச் சொந்தமானது எனவும், இப்பள்ளியானது எவ்வித வருவாயும் தராமல் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் மூத்த மாநகராட்சி அதிகாரி ஒருவர் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்காக வழங்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தில் ஏற்கெனவே அம்மா உணவகம், இருசக்கர வாகன பார்க்கிங் இடம், சுகாதார ஆய்வாளர் அலுவலகம் போன்றவை அமைக்கப்பட்டுவிட்டதாகவும், பள்ளியை மூடிவிட்டு எஞ்சிய நிலத்தையும் மாநகராட்சியின் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்போவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**

**[BIG BOSS 3: ஸ்மோக்கிங் ரூம் பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/38)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *