ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய கேப்டன் அஜிங்க்ய ரஹானே செய்த செயலுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
ஆப்கானிஸ்தான் தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் விளையாடியது. பெங்களூருவில் நடந்த இந்தப் போட்டியில் அபாரமாக ஆடிய இந்தியா 262 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இதன் பரிசளிப்பு நிகழ்வின்போது இந்திய அணி ஆப்கானிஸ்தானைக் கையாண்ட விதத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். அதாவது போட்டியில் வெற்றி பெறும் அணி கோலாகலமாக தங்களது வெற்றியைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இதில் வெற்றி பெற்ற அணியின் கேப்டனான ரஹானே தோற்ற ஆப்கானிஸ்தான் அணி வீரர்களையும் அழைத்து வெற்றிக்கொண்டாட்டத்தில் இணைத்துக்கொண்டார்.
மேலும் அவர்களது கையில் தங்களது வெற்றிக் கோப்பையைக் கொடுத்தும் அவர்களை மகிழச் செய்தது இந்திய அணி. இந்தச் செயலானது பார்வையாளர்களை ரொம்பவே நெகிழச் செய்வதாக இருந்தது.
முதன்முறையாக டெஸ்ட் போட்டி ஆடும் ஆப்கானிஸ்தான் அணியை இந்த மாதிரி நட்புறவுடன் அணுகிய இந்திய அணியையும், கேப்டன் ரஹானேவின் செயலையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்நிகழ்வின் வீடியோ காட்சியை பிசிசிஐ [ட்விட்டரில்](https://twitter.com/BCCI/status/1007602424222224384) பகிர்ந்துள்ளது.
�,