ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆதரவுடன் ஆட்சியமைக்க பிடிபி தலைவர் மெஹ்பூபா முப்தி உரிமை கோரியுள்ளார். இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான ‘சாம்னா’வில் வெளியான தலையங்கத்தில், நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கில் இடப்பட்ட அப்சல் குருவை தீவிரவாதியாக ஏற்றுக்கொள்ள மெஹ்பூபாவின் கட்சி மறுத்துவிட்டது. திஹார் சிறையில் புதைக்கப்பட்டுள்ள அப்சல் குருவின் உடலை அங்கிருந்து தோண்டி எடுத்து தியாகி என்ற கவுரவத்துடன் காஷ்மீரில் அடக்கம் செய்யவே மெஹ்பூபா இப்போதும் விரும்புகிறார்.முதல்வர் பதவிக்கு மெஹ்பூபாவை ஆதரிப்பதில் பாஜக திருப்தி அடையலாம். ஆனால் இதனால் நாட்டு மக்கள் கவலை அடைந்துள்ளனர். ‘பாரத மாதாவுக்கு ஜே’ என்று சொல்வதே நாட்டுப் பற்று மற்றும் தேசியவாதத்தை வெளிப்படுத்தும் வழி என பாஜக கருதுகிறது. ஆனால் மெஹ்பூபா இந்த முழக்கத்தை எழப்புவாரா? என்று குறிப்பிடப்பட்டுள்ளது.�,
{பாரத மாதாவுக்கு ஜே சொல்வாரா மெஹபூபா? : சிவ சேனா
Published On:
| By Balaji

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel