அஞ்சு வருசம் இருக்குற இடம் தெரியாம இருந்த தங்க பாலு ஒரே நாளுல வேர்ல்டு பேமஸ் ஆகிட்டாரு. டிரான்ஸ்லேஷன் விஷயத்துல எச்.ராஜா தான் லீடிங்குல இருந்தாரு. தமிழ் தெரியாத அமீத் ஷாவுக்கே தமிழ் கத்துக் கொடுத்தவர் இல்லையா அவரு.. எவ்ளோ நாள் தான் அவரை வச்சு மீம் போட்டுகிட்டு இருக்குறதுன்னு நம்ம பசங்க தங்க பாலுவை தூக்கிட்டாங்க. பாஜககாரங்களே அவருக்கு பொன்னாடை போர்த்தி போட்டோ எடுக்க துடிச்சுகிட்டு இருக்காங்களாம். இதாவது பரவாயில்லை டிரான்ஸ்லேஷனுக்கு தான் மீம் போடுறாங்க. ஸ்டாலின் தமிழ்ல பேசுன மேட்டருக்கு புதிர் போட்டியே நடத்திகிட்டு இருக்காங்க. கீழே இருக்குற போட்டோவை நல்லா பாருங்க.. அதுல ஸ்டாலினோட டிரேட் மார்க் ஸ்பீச் ஒண்ணு இருக்கு.. அதுக்கு முன்னால அப்டேட்டை பார்த்துடுங்க..
**@anbeSelva**
இப்போ ஐநா அவையில சீனா குறுக்க நிக்கிறான், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியா அறிவிக்க முடியாதுன்னு..
இனிமே பாருங்க மோடியோட வீரத்த
**@mohanramko**
நாங்கள் காங்கிரஸிலிருந்து விலகி வெகுதூரம் வந்துவிட்டோம்!- ஜி.கே.வாசன்
எவ்வளவு தூரம் போயிட்டீங்க…
**@emmeskhaleel**
தலைவரே… எழுந்து வாங்க! ஒரு தொகுதியை ஒதுக்கிட்டாங்க..
அதெல்லாம் முடியாது.. ஒதுக்கின தொகுதியோட ஒரு வேட்பாளரையும் தரட்டும்..
வரேன்…
**@Kozhiyaar**
முன்பெல்லாம் எவருக்கேனும் தலைமுடி கொத்தாக இருந்தால் தான் பொறாமையாக இருக்கும், ஆனால் இப்பெல்லாம் முன் நெற்றியில் முடி இருந்தாலே பார்க்கப் பொறாமையாக இருக்கிறது!!
**@ckcbe**
வாழ்க்கைல நம்ம பிரச்சனையெல்லாம் கடவுள்கிட்ட சொல்லும்போது நடுவுல தங்கபாலு மாதிரி ஒரு ஆள் டிரான்ஸ்லேட் பண்ணி குடுக்கறார் போல ..
ஒரு பிரச்சனையும் தீரமாட்டேங்குது
**@shivaas_twitz**
தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டி – செய்தி
எந்த பரீட்சையா இருந்தாலும் தைரியமா எழுத கிளம்பும் இருவர்…
நல்லா படிச்சவன்…
சுத்தமா எதுவுமே படிக்காதவன்..!
**@Anandh_Offl**
நாம வாங்கிட்டு வந்த பொருளின் விலையில் பாதிய மட்டும் மனைவிகிட்ட சொன்னா போதும். அப்பதான் அவங்க பக்கத்துவீட்டல சொல்றப்ப சரியான முழுவிலையும் சொல்லிடுவாங்க
**@mohanramko**
‘என்னால முடியலைனா, பேரை மாத்தி வச்சிக்குங்க’னு சின்ன வயசுல சபதம் செய்ததெல்லாம் ஞாபகத்துக்கு வருது….
ஆட்சியாளர்கள் கட்டிடங்களுக்கு பேரை மாத்தி வைக்கும் போது…
**@ajmalnks**
பொள்ளாச்சியில் மாணவர் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை-செய்தி
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடும்னு எந்த கிறுக்கனோ ஐடியா கொடுத்திருக்கான்.
**@Anandh_Offl**
பொண்ணுங்களுக்கு ‘குட் டச்’ ‘பேட் டச்’ சொல்லிக் கொடுத்து வளர்க்கறதுக்கு முன்னாடி..
பசங்களுக்கு ‘டோன்ட் டச்’ சொல்லிக் கொடுத்து வளர்க்கணும்.
**@Annaiinpillai**
குழந்தையை பள்ளியில் சேர்க்க நிற்கும் பொழுது சாந்த சொருபியாகவும் , ரேஷன் கடையில் நிற்கும் பொழுது சாணக்கியனாகவும் கியூவில் நிற்க்கிறார்!
“அப்பா”
**@வெ. பூபதி**
‘கேவலம்…ஒரு பொம்பள…’ ‘After all ஒரு பொண்ணு..’ போன்ற வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் வன்முறை நோக்கம் மிகக் கொடுமையானது.
**@Annaiinpillai**
“விடுமுறை எடுத்தாவது வாக்களியுங்கள்!” – பிரதமர் மோடி# என்ன ஜி கண்ணு வேர்க்குது?!
**@amuduarattai**
எங்கயுடையது இலவசம் இல்லாத தேர்தல் அறிக்கை. -கமல்.
ஓட்டு கூட, இப்போ இலவசம் இல்லை ஆண்டவரே..!
**@19SIVA25**
தேர்தல் கூட்டணி வேறு ; இயக்கத்தின் லட்சியம் வேறு – ஜி.கே.வாசன்
அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டுல பதிச்சிட்டு பக்கத்துலையே நின்னுங்க
**@கருப்பு கருணா**
வழக்கு என்னாச்சி..?
சிபிஐ க்கு மாத்தியாச்சி..
மாத்துனது யாரு..
அதிமுக அரசு..
சிபிஐ யார் கட்டுப்பாட்டில் இருக்கு..?
மத்திய அரசு கட்டுப்பாட்டில்…
அது எந்த அரசு..?
பாஜக அரசு…
அதிமுகவும் பாஜகவும் கூட்டணியாமே..
ஆமாம்…
குட்….கோயிந்தா கோயிந்தா!
-லாக் ஆஃப்
�,”