பாடல்கள் கேட்பதை எளிமையாக்கும் `அலெக்ஸா கேஸ்ட்’!

public

அமேசானின் அலெக்ஸா மூலம் பாடல்களை கேட்பதை இன்னும் எளிமையாக்கும் விதமாக `அலெக்ஸா கேஸ்ட்’ என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் அடுத்த கட்டத்துக்குத் தங்களை முன்னெடுக்கும் முயற்சிகளை அமேசான், ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தீவிரப்படுத்திவருகின்றன. மனிதர்களின் பேச்சுக்கள் மூலம் இயங்கக்கூடிய அலெக்ஸா என்ற கருவியை 2004ஆம் ஆண்டு அமேசான் நிறுவனம் முதன் முதலில் உலகிற்கு அறிமுகம் செய்தது. தற்போது செயற்கை நுண்ணறிவைக் கொண்டு அந்நிறுவனம் இதில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது `அலெக்ஸா கேஸ்ட்’ என்ற விளம்பரமில்லா பாடல்களைக் கேட்கும் புதிய வசதியை நேற்று (ஜூலை 27) அறிமுகம் செய்துள்ளது.

`அமேசான் ப்ரைம் மியூசிக்’ என்ற செயலியின் மூலம் அலெக்ஸா கருவிகளில் இந்த வசதியை உபயோகிக்க முடியும். இதன்மூலம் பாடல்களை ஒளிபரப்புவது மட்டுமின்றி, ஒலியைக் கட்டுக்குள் வைக்கவும் முடியும்.

இது குறித்து அமேசான் ப்ரைம் மியூசிக் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் சஹஸ் மல்ஹோத்ரா கூறுகையில், “அலெக்ஸாவின் வாய்ஸ் கண்ட்ரோல் தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ள இந்தச் செயலியின் மூலம் பாடல்களைக் கேட்பது எளிமையான நல்ல அனுபவத்தைத் தரும்” என்று தெரிவித்துள்ளார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0