பாஜக வென்றால் மேலாண்மை வாரியம் அமையாது: அன்புமணி

Published On:

| By Balaji

>

கர்நாடகத்தில் பாஜக வென்றால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகே நீர் மோர் வழங்கும் பந்தலை பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இன்று (மே1) திறந்து வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ், திரையரங்குகளில் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தாமல், முதலமைச்சர் தன்னை கடவுளாகச் சித்தரிப்பது போன்ற விளம்பரங்களை வெளியிடுவது வெட்கப்பட வேண்டிய செயல். முதலமைச்சர் பழனிசாமி மனதளவில் தன்னை ஜெயலலிதாவாக நினைத்துக்கொண்டு செயல்பட்டுவருகிறார்” என்றும் குற்றஞ்சாட்டினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சியினால் மட்டுமே தமிழகத்தில் 1,300 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன என்று கூறிய அவர், “ஐந்து கோடி மக்கள் காவிரியை நம்பி இருக்கிறார்கள். காவிரி என்பது நமது உரிமை, அதை விட்டுத்தர முடியாது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப்போக்கோடு செயல்படுகிறது.

கர்நாடகாவில் பாஜக சார்பில் 17 எம்பிகள் இருப்பதால் அதைத் தக்க வைத்துக்கொள்ளவே மத்திய பாஜக அரசு முயல்கிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்பது உறுதி. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் செய்கிறது. எனவே மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share