]பாஜக எதிர்ப்பு அணி: நாயுடு தீவிரம்!

Published On:

| By Balaji

பாஜகவுக்கு எதிரான அணியில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே குடைக்குள் கொண்டு வரவேண்டுமென்ற நோக்கில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசக் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு. நேற்று (மே 18) காலை டெல்லியில் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பில் பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது குறித்தும் பாஜக எதிர்ப்பு அணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களான சுதாகர் ரெட்டி, டி.ராஜா ஆகியோரையும் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்.

அதன்பின் உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவுக்குப் புறப்பட்டுச் சென்ற சந்திரபாபு நாயுடு, அங்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், லோக் தந்த்ரிக் கட்சித் தலைவர் சரத் யாதவ் ஆகியோரையும் நாயுடு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதே வேளையில், பேச்சுவார்த்தையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து மேற்கு வங்க முதல்வரும், திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியுடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வருகிறார் நாயுடு. மே 23ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, டெல்லியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளதாக உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் பேச்சுவார்த்தை முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மே 17ஆம் தேதியன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார் நாயுடு. அதுமட்டுமல்லாமல், பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கும் இடமுண்டு என்று நாயுடு தெரிவித்துள்ளார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share