|பாஜக அல்லாத அணி: மம்தாவுடன் சந்திரபாபு ஆலோசனை!

Published On:

| By Balaji

மத்தியில் பாஜக அல்லாத அணியின் தலைமையில் புதிய அரசை அமைப்பது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தேர்தல் வாக்குப்பதிவு மே 19ஆம் தேதி முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக வெளியாகியுள்ளன. இந்த நிலையில் பாஜகவுக்கு எதிரான மாநிலக் கட்சிகளை இழுக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. அடுத்தகட்ட முடிவுகள் குறித்து பகுஜன் சமாஜ் – சமாஜ்வாதி கட்சிகள் நேற்று (மே 20) தீவிர ஆலோசனை நடத்தியுள்ளன. பாஜக அல்லாத அணி ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் மிகத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

நேற்று மாலை மேற்கு வங்கம் சென்ற சந்திரபாபு நாயுடு, கொல்கத்தாவில் உள்ள மம்தா பானர்ஜியின் குடியிருப்புக்குச் சென்று பாஜக அல்லாத அணியை ஆட்சியில் அமர்த்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளார். 45 நிமிடங்கள் நீடித்த இந்த ஆலோசனையில் பாஜகவுக்கு எதிராக தேர்தலுக்குப் பிந்தைய மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாகவும், பிராந்தியக் கட்சிகளை இணைத்து காங்கிரஸ் ஆதரவுடன் அடுத்த ஆட்சியை அமைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனை குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23ஆம் தேதியன்று மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. அந்தக் கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. மம்தா பானர்ஜியும் டெல்லி சென்று ஆலோசனை செய்ய திட்டமிட்டுள்ளார்” என்றார்.

பாஜக அல்லாத அணி ஆட்சியமைப்பது தொடர்பாக மே 19ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரை தனித்தனியாகச் சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். அதேபோல பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவையும் லக்னோவில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)

**

.

**

[அதிமுக: கட்சிப் பொறுப்பிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/57)

**

.

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)

**

.

**

[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)

**

.

**

[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)

**

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share