டிடிவி-க்கு கான்வாஸ் பண்ண ஒரு வேலை இருக்கு வர்றியாடா தம்பின்னு கேட்டா, கண்டிப்பா வர்றேன்னு சொல்லு மூனு ஃபயர் மெஸேஜ் அனுப்புனான். சரி வாடான்னு கூட்டியாந்து, ‘பாராசூட்ல ஏறி வானத்துல பறந்துக்கிட்டே ஒவ்வொரு கிப்டு பாக்ஸா ஒவ்வொரு வீட்டுலயும் போடு. கட்சி பேதமில்லாம எல்லார் வீட்டுக்கும் போட்ரு தம்பி’ அப்டின்னு சொன்னா, எங்க ஊர்க்காரங்களை காசுக்கு ஓட்டு போடுறவங்கன்னு நினைச்சியா? எங்களுக்கு நல்லது செஞ்சவங்களுக்குத்தான் ஓட்டுன்னுட்டு போறான். ஏன் டிடிவி சார், 200 மீட்டர் உயரத்துக்கே பயப்புடுறவங்களுக்குத்தான் கப்பல்ல வேலை கேட்டுக்கிட்டு இருக்கீங்களா?
**சரவணன்**
நாலு நல்ல வார்த்தை காலை பொழுதில் கேட்க வேண்டும் என்றால் வீட்டில் தாத்தா பாட்டி இருக்க வேண்டும்
**ரஹீம் கஸ்ஸாலி**
சிவகங்கையில் எச்.ராஜாவுக்கு ஒன்று, அவரது அட்மினுக்கு ஒன்றுன்னு மொத்தம் ரெண்டு ஓட்டு போடச்சொன்னால் நல்லாருக்கும்ல?” என்றான் ஒரு பையன்.
“ஏன்… ஜெயிச்சா நான்தான் ஜெயிச்சேன்னும், தோற்றால் என் அட்மின் தான் தோற்றாருன்னும் சொல்லவா?” என்றேன்.
**CSK அஜய்**
உப்புமாவே ஒரு கொடூர ஐட்டம்.. அதுக்கு தொட்டுக்க தயிரா?
**Pirai Kannan**
எந்த பெட்டி, எத்தனையாவது நம்பர்-ன்னு ஒவ்வொரு கட்சி காரனும் பூத்-க்கு வெளில நின்னு ஓட்டு போட போறவங்க கிட்ட சொல்லி அனுப்புறது தான் வாக்குப்பதிவு அன்றைய முக்கியமான வேலை! அதுதான் original Canvas. தமிழ்நாட்டு காரனுக அதுல பழம் தின்னு கொட்டை போட்டவய்ங்க!
**mathimaran**
பாமக பிரமுகர்: டாக்டர் ராமதாஸ் ஆணையிட்டால், ஸ்டாலின் நடமாட முடியாது.
ஓ.. பல்லக்குல ஒக்கார வச்சி தோள்ல சுமப்பிங்களோ!
**கோழியின் கிறுக்கல்!!**
ஆயுர்வேத பொருட்கள் விற்கிறோம்னு என்று கூறி பாத்ரூம் கழுவும் ‘ஆசிட்’லாம் விற்கிறார்கள்!
‘ஆசிட்’ல என்னயா ஆயுர்வேதம்!?
**Mr.கட்டெறும்பு**
அரசியல் பேசி உறவுகளையும் , நண்பர்களையும் இழக்காதீர்கள்,
எந்த தலைவனும் உன்னை கேட்டு முடிவு எடுப்பதில்லை..!!
**Tamizhan Memes™27.9K**
ஐந்தில் ஒன்றில் தாமரை மலர்ந்தால் கூட..
இனி டுவிட்டரில் அரசியல் பதிவே போடமாட்டேன்..
இது தமிழிசை மேல சத்தியம்..
**செந்திலின்_கிறுக்கல்கள்**
ஜெயிக்க வெச்சா சிவகங்கையை சிங்கப்பூர் ஆக்குவேன்- எச்.ராஜா # முதல்ல தமிழ்நாட இந்தி நாடா மாத்தாம இருங்க ஏட்டையா?!
**Yoda**
“இவருக்கெல்லாம் எதுக்கு மாலை போடனும்” என்பதன் பின்னால் இருக்கும் வன்மம் புரிந்தால்..
பொன்னாடை போர்த்தவது, ஒவ்வொருவரையும் அவர்களே என்று சொல்லும் சமூக அரசியலும் புரியும்.
**மித்ரன்**
நான் மக்களவைக்கு போவேன் – எச்.ராஜா
எலக்சன் ரிசல்ட் வரட்டும் மக்களவையா இல்ல மனநல மருத்துவமனையான்னு தெரிஞ்சிரும்..?!
**மித்ரன்**
கனவுகள் மெய்ப்பட உங்கள் விரல்களில் மை பட வேண்டும் – கமல்ஹாசன்
ஆண்டவரே இது ராம்ராஜ் பனியன் கம்பெனியோட டையலாக் ஆச்சே..?!
**பரட்டை**
என்ன துரை ரெய்டு போல இருக்கு….
ஆமாய்யா… ரொம்ப நாளா நானே தேடிக்கிட்டுஇருந்த விக்ஸ் டப்பா கிடைச்சிடுச்சு….
**ஆஹான்!!**
தேர்தல் முடிவு வெளியாகும் வரை ஜோதிடர்களின் தேர்தல் கணிப்புக்கு தடை – தேர்தல் ஆணையம்.
க்கும் .. கல்யாண வாழ்க்கை கணிப்பே ஒழுங்கா சொல்ல மாட்றானுங்க இதுல தேர்தல் கணிப்பு மட்டும் அப்படியே அறுத்து தள்ளிடுவானுங்க ..
** ✍JKK **
ஸ்மார்ட் போன்ஸ் ஒருவகைல சிட்டி ரோபோ தான்..
அது எத்தனை “பாயின்ட் ஓ”வா இருந்தாலும் பேட்டரி லோ.. லோ..
**SHIVA SWAMY.P**
தனிமையில் தவிக்கும்போது உங்களுடைய சிந்தனைகளை கட்டுப்படுத்துங்கள்,
கூட்டத்தில் பேசும்போது உங்கள் வார்த்தைகளை கட்டுப்படுத்துங்கள்,
சிறியவர்களோடு பேசும்போது நற்பண்புகளை வெளிப்படுத்துங்கள்,
பெரியவர்களோடு பேசும்போது உங்கள் தன்னடக்கத்தை வெளிப்படுத்துங்கள்…
**KuTTy**
பேங்க் : பணத்தை எப்ப தருவே
மல்லையா : RCB டீம் கப்பு வாங்கும் போது தாரேன்
பேங்க்: RCB எப்ப கப்பு வாங்கும்
மல்லையா: Iam waiting
**கவின்தமிழ்**
நடிகர்கள் பிரச்சாரத்துக்கு போனால் கூட்டம் வருமுங்கிற மூடநம்பிக்கையை உடைத்த பெருமை கமல்ஹாசனையே சேரும் ..
**சால்ட்&பெப்பர் தளபதி**
-ஆர்சிபிய பாத்தா உங்களுக்கு பாவமா இல்ல?
-இருந்துச்சு.
-எப்ப?
-டாஸ் வின் பண்ணியும் பீல்டிங் எடுத்தப்ப.
**நித்யா**
ஶ்ரீபெரும்புதூரில் கூட்டம் இல்லாததால் படப்பை வந்தார்
படப்பையில் கூட்டம் இல்லாததால் ஒரகடம் வந்தார்
ஒரகடத்தில் கூட்டம் இல்லாததால் மீண்டும் ஶ்ரீபெரும்புதூர் வந்தார்
ஶ்ரீபெரும்புதூரில் கூட்டம் இல்லாததால் சென்னைக்கே திரும்பி சென்றார்.
ஆம், அவர் தாம் கமல்.
-லாக் ஆஃப்.
�,”