தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் தயாராகிவரும் படம் ‘பாகுபலி-2’. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா மற்றும் அனுஷ்கா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘பாகுபலி’ முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. சுமார் 613 நாட்கள் நடந்த பாகுபலி படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6ஆம் தேதி நிறைவடைந்தது என ராஜமௌலி தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.இந்த படத்தின் டிரெய்லரை வரும் குடியரசு தினத்தன்று வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தனர். எனினும் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால், டிரெய்லரை பிப்ரவரியில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு டிரெய்லர் வெளியாகாததை சமன் செய்ய புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர், பிரபாஸ் மற்றும் அனுஷ்கா அம்பு எய்துவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் வருகிற மார்ச் மாதம் திரைக்கு வருகிறது.�,