பாகிஸ்தான்: சம்பள உயர்வை வலியுறுத்தி போராட்டம்!

public

பாகிஸ்தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை அந்நாட்டு அரசு உயர்த்தி உள்ளதால், பாகிஸ்தான் அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 30 ரூபாய் உயர்த்தி அறிவித்தது. அதன்படி பாகிஸ்தானில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 209.86 ரூபாயாக உயர்ந்துள்ளது, டீசல் விலை லிட்டருக்கு 204.15 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் மின்சார கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதால் பாகிஸ்தான் நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
பாகிஸ்தான் அரசு விரைவில் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்யவுள்ள நிலையில், பாகிஸ்தான் அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரியுள்ளனர். விரைவில் பாகிஸ்தான் அரசு வெளியிடும் பட்ஜெட் அறிக்கையில் இந்த சம்பள உயர்வு இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் திங்கட்கிழமை முதல் பாகிஸ்தான் அரசு ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் அரசு ஊழியர் ஒருவர் கூறுகையில், “பாகிஸ்தானில் தற்பொழுது எரிபொருள் விலையும் மின்சார கட்டணமும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் விரைவில் பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் அறிக்கையில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதவிகிதம் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தை கையில் எடுக்கிறோம். இதுகுறித்து பட்ஜெட் அறிக்கை வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.