இத்தனை நாளும் இந்தியா தோத்துரும்னு சொன்ன பாகிஸ்தானியர்களை உருட்டு உருட்டுனு உருட்டிட்டி, ‘ஹலோ, கே.எல்ராகுலா? எப்ப சார் அவுட் ஆவீங்க’ன்னு கேட்டுக்கிட்டு கெடக்காய்ங்க. இவங்க கூட பரவால்ல, விளையாட்டு பராக்கா பேசுறாங்கன்னு விட்றலாம். பட் இந்த ஃபாதர்ஸ் டே செலிபிரேட் பன்ற சிலரைப் பாத்தா தான் ஒரு சம்பவம் நியாவகம் வருது. ஃபிரெண்டு ஒருத்தனோட அப்பா இறந்தப்ப, அவர் நண்பர் அந்தப் பையனுக்கு தைரியம் சொல்ல வந்தார். “எதுல தோத்துட்டன்னு நீ அழற. உன் அப்பாவை பணக்காரனா வாழவைக்க முடியல, சுகவாசியா வாழவைக்க முடியலன்னு அழுதா, அழாத. அது உன் தப்பு இல்லை. ஆனால், கடைசி காலத்துல உன் அப்பனோட வாழ முடியாம போயிருச்சேன்னு நினைச்சு அழுதா, அழு. அது முழுக்க முழுக்க உன் தப்பு. பணக்காரனா வாழ ஆசைப்பட்டிருந்தா உன்னை படிக்கவெச்ச காசை மிச்சம் பண்ணி அவன் வாழ்ந்துருப்பான். அவன் ஆசைப்பட்டது எந்த கஷ்டத்துலயும் உங்களோட வாழணும்ன்றது தான். அது நடக்காம போனதுக்கு உன் முடிவுகள் காரணம்னா, நீ வாழ்க்கை முழுக்க அவனை நினைச்சு அழணும்” அப்டின்னு சொல்லிட்டு போய்ட்டார். அந்தாள் தைரியம் சொல்ல வந்தாரா, குத்திகாட்ட வந்தாரான்னு தெரியல. ஆனா, அவர் சொன்னது சிறப்பான சம்பவம். என்னைக்கு சாவோம்னு தெரியாம அவசர அவசரமா வாழ்றது தப்பில்லை. ஆனா, எந்த மாதிரி வாழ்க்கையை யாரோட வாழ்றோம்ன்றது தான் முக்கியம். சரி, நீங்க அப்டேட்டைப் படிங்க. நான் போய் எங்கப்பாவுக்கு வாழ்த்து சொல்லிட்டு, பாக்கெட்ல இருந்து காசு ஆட்டய போட்டுட்டு வர்றேன். கோடி கோடியா சம்பாதிச்சாலும், அப்பன் பாக்கெட்ல இருந்து பணம் திருட்ற சந்தோஷம் இருக்கே. அடாடாடாடாடா…..
**உள்ளூராட்டக்காரன்**
நீங்க அங்க மழை நிற்க பிரார்த்தனை பண்ண போறீங்க
நாங்க இங்க மழை வேண்டி பிரார்த்தனை பண்ணப்போறோம்
**Contractor Hasan Kalifa**
அப்பா உயிருடன் இருந்தவரை அவருடைய எந்த பேச்சையும் கேட்டதில்லை,இப்போது அவருடைய நினைவுகளே என்னை வழிநடத்துகிறது.
**Prashanth Rangaswamy**
கடல் நீரை குடிநீராக்க 7000 கோடி ரூபாயில் திட்டம் – செய்தி
ஏண்டா வெண்ணெய்களா , அதுல ஒரு 1000 கோடி இருந்தா போதும், சென்னையை சுற்றி இருக்குற ஏரிகளை தூர் வாரி, பராமரிக்க. திருட எது வசதியா இருக்குமோ அதை திட்டம்னு சொல்லி கொண்டு வர்றது !!
**mohanram.ko**
லேப்டாப் வந்தபின் கணினியின் ‘மவுசு’ குறைஞ்சிடிச்சி
**எனக்கொரு டவுட்டு**
அண்டர்டேக்கரும் நமக்கு வர்ற பிரச்சனையும் ஒண்ணு, எவ்ளோ அடிச்சாலும் எந்திரிச்சு உக்காந்திருது..!.
**ஊர்சுற்றி**
ரோகித் சர்மா நவ்
“தூக்கி அடிச்சிடுவேன் பாத்துக்க”
**Aravind Raja**
அடிபட்டு
மாவுக்கட்டுப்போட்டா
அது சம்பவம்.
மாவுக்காகவே
அடிபட்டு கட்டுப்போட்டா
அது சரித்திரம்.
**ஜால்ரா காக்கா**
என் தலைவன் பிரபாகரன்ட்ட கேட்டேன் ஏன் நாம சேர , பாண்டிய பாட்டன் கொடிய வைக்காமா சோழ பாட்டன் கொடிய வச்சி இருக்கோம்ன்னு-சீமான்
போட்டோ எடுக்குற 5 நிமிஷத்துல ஆமை கரி துன்னு , அரிசி கப்பலில் Ak74 துப்பாக்கிய வச்சு சுட்டு கடைசியா சோழ வரலாற்றை வேற பேசி இருக்கீங்க கின்னஸ் சாதனை தான்
**Aadharshini**
ஐயயோ.. வாழ்க்கை ல எவ்ளோ சோகம் இருந்தாலும் சாப்பிடாம இருக்க மட்டும் பழகிடாதீங்க
**ஊர்க்காவலன்™**
நமக்கு பிடிச்ச மாதிரி ஒரு நாள் லைப் மாறும்…
அப்ப ஒன்னு நமக்கு தலையில “நர” தள்ளியிருக்கும்…
இல்ல வாயில “நொர” தள்ளியிருக்கும்…
**ஜால்ரா காக்கா**
உங்க பவுலிங்க நம்பி சேஸிங்க் எடுத்தேன் பாத்தியா எம்புத்திய செருப்பாலயே அடிக்கனும்டா-தோழர் சர்ப்ராஸ்
**ஜோக்கர்…**
இருக்கும் போது கற்றுத்தந்ததை விட,
இல்லாத போது கற்றுத்தந்ததுதான் அதிகம்.
“அப்பா”
**SKP KARUNA**
பாவம்யா கே.எல். ராஹுல்.. 57 ரன் அடிச்சும் அவன் அவுட் ஆனபோது பாகிஸ்தான் ரசிகர்களோட இந்திய ரசிகர்களும் சேர்ந்து கொண்டாடறாங்க!
**ஆல்தோட்டபூபதி**
ஷாட்டை பாரு..
குடிச்சுட்டு குப்புற கிடக்கிறவனை எழுப்பி காசை கடன் கொடுத்த மாதிரி கேட்ச் தரான் ராகுல்
**உள்ளூராட்டக்காரன்**
பாகிஸ்தான் வீரர்கள் கையில் சிக்காமல் பந்து பறந்து செல்ல, மேகமூட்டம் நமக்கு சாதகமாக இருக்கும் என்று நேற்று வீடியோ கான்பெரன்ஸில் இந்திய வீரர்களுக்கு ஆலோசனை கூறினேன்
**கடைநிலை ஊழியன்**
தன் குழந்தையின் சிரிப்பை வீடியோ காலில் மட்டுமே பார்த்து சிறு ஏக்கத்துடன் மகிழ்பவன் “வெளிநாட்டில் பணிபுரியும் தந்தை”
**சுபாஷினி**
100 நாள் வேலை என்று சொல்லி கூட்டமாக 2 மணி நேரம் ஊர் கதை பேசிவிட்டு வந்தார்கள்..!
மிக சரியான திட்டத்தை நிர்வாகமற்ற திறன் ஊழலாலும் தேவையற்ற திட்டமாக மாறி போனது..!
இத்திட்டத்தை சரியாக பயன்படுத்தியிருந்தால் இந்நேரம் கிராமங்கள் தோறும் நீர்நிலைகள் பேணி காக்கப்பட்டிருக்கும்..!
**ரஹீம் கஸ்ஸாலி**
தந்தி டிவிக்கு நம்பகத்தன்மையில் முதலிடமாம்
யாரு சொன்னா?
தினத்தந்திக்காரன்தான் சொன்னான்
அவனுகளே இப்படி கலாய்ச்சுக்கிட்டா நம்ம எதுக்கு இருக்கோம்?!
**ஆல்தோட்டபூபதி**
உள்ள போறவன் எவனா இருந்தாலும் மினிமம் 50 அடிக்காம வந்தா குனிய வச்சு குத்துவேன்னு சொல்லியனுப்பி இருப்பான் போல கோலி
**amudu**
நம் தலை நிமிர வேண்டும் என்பதற்காக, பல நேரங்களில் தலை கவிழ்ந்திருப்பார்.. அப்பா
**செந்திலின்_கிறுக்கல்கள்**
முன்னோர்களின் கீச்சுகள் முதலில் கோவில் கல்வெட்டில் தான் வலைபாய்ந்துள்ளது!
-லாக் ஆஃப்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: தினகரன் -அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரகசிய சந்திப்பு!](https://minnambalam.com/k/2019/06/15/67)**
**[பிரசாந்த் கிஷோர்- எடப்பாடி சந்திப்பு: கட்சியைக் கைப்பற்ற ஸ்பெஷல் வியூகம்!](https://minnambalam.com/k/2019/06/16/19)**
**[முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!](https://minnambalam.com/k/2019/06/15/43)**
**[விஜய் ரசிகர்களுக்கு மோகன் ராஜாவின் உறுதிமொழி!](https://minnambalam.com/k/2019/06/16/17)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
�,”