?பவன் கல்யாணின் மறுப்பு!

Published On:

| By Balaji

அரசியலில் பிஸியாக வலம்வரும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண் தரப்பிலிருந்து தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக அறியப்படும் நடிகர் சிரஞ்சீவி, படத்தில் நடித்துக்கொண்டிந்தபோதே திடீரென பிரஜா ராஜ்ஜியம் எனும் கட்சியை ஆரம்பித்து தீவிர அரசியலில் இறங்கினார். 2008இல் ஆரம்பிக்கப்பட்ட அவரது கட்சி ஆவரேஜான வரவேற்பை மட்டுமே பெற, பின்னர் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்துக்கொண்டார்.

சிரஞ்சீவியின் கதை இப்படி இருக்க, அவரது தம்பியும் முன்னணி நடிகருமான பவன் கல்யாணும் 2014இல் அரசியல் என்ட்ரி கொடுத்தார். அந்த வகையில் ஜன சேனா என்னும் கட்சியை ஆரம்பித்த அவருக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகக் கூறியுள்ள பவன், இனி புதிய படங்களில் நடிப்பதில்லை என 2017ஆம் ஆண்டு முடிவு செய்தார். அந்த வகையில் அவர் நடித்து கடைசியாக வெளியான அஞ்ஞாதவாசியே அவரது கடைசி படம் எனக் கூறப்பட்டது.

2019ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிவருகிறது. இந்நிலையில் பவன் கல்யாண் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் எனும் தகவல் டோலிவுட் வட்டாரத்தில் வெளியானது. இவ்விவகராத்தில் பவன் கல்யாண் தரப்பிலிருந்து தற்போது பதில் வந்துள்ளது. அதன்படி ஜன சேனா கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த பதிவில், ‘பவன் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் செய்தி முற்றிலும் பொய்’ எனவும், அரசியலில் மக்களுக்கு சேவை செய்யவே பவனுக்கு தற்போது நேரமிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share