வரும் ஜூன் 21ஆம் தேதியன்று யோகா தினம் கொண்டாடப்படுவதையொட்டி அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் யோகா நிகழ்ச்சிகள் நடத்துமாறு துணைவேந்தர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது பல்கலைக்கழக மானியக் குழு.
மத்திய அமைச்சரவையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஆயுஷ் அமைச்சகமானது யோகா தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துவதற்குப் பொறுப்பேற்றுள்ளது. 2015ஆம் ஆண்டு இளைய தலைமுறையினருக்கு யோகா கலாசாரத்தைக் கற்பிக்கும் நோக்கில் யோகா தினம் கொண்டாட அழைப்பு விடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்ந்த நிலையில், வரும் ஜூன் 21ஆம் தேதியன்று ஐந்தாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் அன்றைய தினம் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டுமென்று பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனப் பொறுப்பாளர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது யூசிஜி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு. அப்போது, யோகாவின் அடிப்படைப் பயிற்சிகள் உட்படப் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தற்போது உலகம் முழுவதும் யோகா பரவியுள்ள நிலையில், இளைய தலைமுறையினர் மத்தியில் யோகாவைக் கொண்டுசெல்வதன் மூலமாக அதனைத் தேசியப் பெருமையாகக் கொண்டாட முடியும்” என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை விடப்பட்டிருந்தாலும், இந்நிகழ்ச்சிக்குத் தேவையான வசதிகளை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செய்து தர வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, யோகா பற்றிய 45 நிமிட காணொளி ஒன்று பல்கலைக்கழக மானியக் குழுவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
**
மேலும் படிக்க
**
**
[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)
**
**
[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)
**
**
[நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/08/48)
**
**
[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)
**
**
[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)
**
�,”