:
ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான பரிவர்த்தனைகளுக்கு வரி விதிப்பது குறித்து அரசு இன்னும் எவ்வித முடிவையும் மேற்கொள்ளவில்லை என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சக்திகாந்த தாஸ் மேலும் கூறுகையில், “50,000 ரூபாய்க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு வரி விதிக்க வேண்டும் என்று சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், முதலமைச்சர்கள் குழு முன்வைத்த இந்த பரிந்துரை குறித்து அரசு எவ்வித முடிவையும் இன்னும் மேற்கொள்ளவில்லை. அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அம்சங்களை அரசு கவனமாக ஆராய்ந்து அதிவிரையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் மத்திய நிதியமச்சரான அருண் ஜெட்லி கார்பரேட் நிறுவன வரி குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், அரசுக்கு நிதி நெருக்கடி இருப்பதால் உடனடியாக 25 சதவிகிதமாகக் குறைத்துவிட முடியாது. ஏனெனில் நிதி நெருக்கடி அதிகமாக இருப்பதால் பிற துறைகளுக்கு இதனால் நஷ்டம் ஏற்படுவதை அரசு அனுமதிக்காது. உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் காணப்படும் பிரச்னைகளை ஆராய்ந்து, செலவிடுதல் குறித்து ஆலோசித்தே அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான முதலமைச்சர்கள் குழு, ரூ.50,000க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு வரி விதிக்கவேண்டும் என்று பரிந்துரை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.�,