பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு: ஈரான் குற்றச்சாட்டு!

Published On:

| By Balaji

பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் விரைவில் அதற்கான விலையை வழங்க வேண்டியிருக்கும் என்று ஈரான் பாதுகாப்பு படையின் மேஜர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 14ஆம் தேதியன்று புல்வாமாவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 44 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்காக சுமார் 50 உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் பதில் தாக்குதல் நடத்த இந்திய தரப்பும் தயாராகிவருகிறது. இதேபோல பாகிஸ்தானின் மற்றொரு அண்டை நாடான ஈரானிலும் பிப்ரவரி 13ஆம் தேதியன்று ஈரான் எல்லையருகே பயங்கரவாதிகள் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் ஈரான் பாதுகாப்பு படையை சேர்ந்த 27 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரத்தில், ஈரானை தாக்கும் பயங்கரவாத கும்பல்களுக்கு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் ஆதரவளிப்பதாக ஈரான் பாதுகாப்பு படையின் மேஜர் ஜெனரல் முகமது அலி ஜபாரி குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக அவர்கள் பழிவாங்கப்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். எனினும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கவில்லை என்று சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் ஈரானின் குற்றச்சாட்டை மறுத்துள்ளன.

இதுகுறித்து மேஜர் ஜெனரல் முகமது அலி ஜபாரி பேசுகையில், “ஏன் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் ராணுவமும், பாதுகாப்பு துறையும் ஆதரவளிக்கின்றன? இதற்கான விலையை பாகிஸ்தான் விரைவில் வழங்க வேண்டியிருக்கும். உயிர்நீத்த எங்களது வீரர்களின் ரத்தத்திற்காக நாங்கள் பழிதீர்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share