பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் பாகிஸ்தான்!

Published On:

| By Balaji

2018-19ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தும்படி பயங்கரவாதக் குழுக்களை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இதனால் இந்திய பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்த வேண்டியுள்ளது. பாகிஸ்தான் உதவியுடன் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுவதும், பாகிஸ்தானின் பயங்கரவாதக் கொள்கையையும் புல்வாமா தாக்குதல் உறுதிப்படுத்துகிறது.

பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தி, இந்தியாமீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் பயங்கரவாத கட்டமைப்பை பாகிஸ்தான் கலைக்கும் வரை தேச பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா உறுதியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கும். இந்தியா உட்பட பாகிஸ்தானின் அண்டை நாடுகள்மீது தாக்குதல் நடத்தும் ஜிஹாதி மற்றும் பயங்கரவாதக் குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் மறுக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நிலை குறித்து இந்த அறிக்கையில், “கடந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதியன்று சுந்தர்பானி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. எல்லைக் காட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் இந்திய ராணுவச் சாவடிகளை பாகிஸ்தான் தொடர்ந்து குறிவைத்ததைத் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**

**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**

**[மாசெக்களுக்கு தெரியாமல் உதயநிதி நடத்தும் புது ஆபரேஷன்!](https://minnambalam.com/k/2019/07/18/45)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share